K U M U D A M   N E W S

கரூரில் பாதுகாப்புக் குறைபாடு இருந்ததா? விஜய்-யின் 'ஒய் பிரிவு' அதிகாரிகளிடம் உள்துறை அமைச்சகம் விசாரணை!

கரூரில் 41 பேர் உயிரிழந்த நெரிசல் சம்பவம் தொடர்பாக, தவெக தலைவர் விஜய்-க்கு வழங்கப்பட்ட 'ஒய் பிரிவு' பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் விசாரணை நடத்தி வருகிறது. பாதுகாப்பில் குறைபாடு இருந்ததா மற்றும் கமாண்டோக்களின் செயல்பாடு குறித்து அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.