தமிழ்நாடு

திமுக முப்பெரும் விழாவிற்கு சென்ற பேருந்து மோதி கர்ப்பிணி உயிரிழப்பு- படுகாயத்துடன் கணவர் அனுமதி

திமுக முப்பெரும் விழாவை முடித்துவிட்டு அதிவேகத்தில் வந்த பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதி 7 மாத கர்ப்பிணி பெண் உயிரிழப்பு

திமுக முப்பெரும் விழாவிற்கு சென்ற பேருந்து மோதி கர்ப்பிணி உயிரிழப்பு- படுகாயத்துடன் கணவர் அனுமதி
கரூரில் திமுக முப்பெரும் விழாவிற்கு சென்று திரும்பிய பேருந்து மோதி கர்ப்பிணி உயிரிழப்பு
கரூர் மாவட்டம், சாலபாளையம் ஜே.ஜே நகர் பகுதி சேர்ந்த நவீன் - ரேணுகா தம்பதியினர் ரேணுகா மணல்மேடு நியாய விலை கடையில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர் 7 மாதம் கர்ப்பமாக உள்ளார்.

பேருந்து மோதி கர்ப்பிணி உயிரிழப்பு

கணவன், மனைவி இருவரும் கரூரில் இருந்து வீட்டிற்கு கோவை சாலை வழியாக இருசக்கர வாகனத்தில் சென்றுக்கொண்டிருந்தபோது தண்ணீர்பந்தல் பகுதியில் திமுக மாநாட்டை முடித்துவிட்டு சென்ற பேருந்து இரு சக்கர வாகனத்தின் மீது மோதியதில் ரேணுகா, நவீன் கீழே விழுந்துள்ளார்.இதில் ரேணுகாவிற்கு பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், இருவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.


பரிசோதனை செய்து மருத்துவர்கள் 7 மாத கர்ப்பமாக இருந்த ரேணுகா மற்றும் குழந்தை உயிரிழந்துவிட்டதாக கூறினார்.இந்த நிலையில் படுகாயம் அடைந்த கணவர் நவீன் சிகிச்சை பெற்று வருகிறார்.

பொதுமக்கள் குற்றச்சாட்டு

திமுக முப்பெரும் விழாவிற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் பேருந்து மற்றும் டாட்டா ஏசி வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் அழைத்து வந்த நிலையில், மாநாட்டை முடித்துவிட்டு அதிவேகத்தில் வந்த பேருந்து மோதி விபத்து ஏற்பட்டதாக அப்பகுதி பொதுமக்கள் கூறினார். சம்பவம் நடந்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாகியும் அப்பகுதியில் ஒரு போலீசார் வரவில்லை எனவும் குற்றம்சாட்டியுள்ளனர்.

குறிப்பாக நவீன் மற்றும் ரேணுகாவிற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆன நிலையில், தற்போதுதான் ரேணுகா 7 மாதம் கர்ப்பமாக இருக்கிறார். கர்ப்பிணி பெண் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் கரூர் மாவட்டத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.