கடந்த வாரம் பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவான 'வேட்டுவம்' எனும் தமிழ் திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது, ஸ்டண்ட் மாஸ்டர் மோகன் ராஜ் விபத்துக்குள்ளாகி உயிரிழந்த சம்பவம் திரை உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் துயரமான சம்பவத்திற்கு பிறகு, ஸ்டண்ட் கலைஞர்களின் பாதுகாப்பு குறித்த அக்கறையில், நடிகர் அக்ஷய் குமார் முக்கியமான முடிவெடுத்துள்ளார்.
அதன்படி, அக்ஷய் குமார், இந்தியாவில் உள்ள 650 ஸ்டண்ட் மாஸ்டர்களுக்காக மருத்துவ இன்சூரன்ஸ் திட்டத்தை ஏற்படுத்தியுள்ளார். இந்த இன்சூரன்ஸ் திட்டத்தின் கீழ், வேலைக்கான ஸ்டண்ட் பயிற்சி அல்லது படப்பிடிப்பின்போது விபத்து ஏற்பட்டால், ரூ.5.5 லட்சம்வரை மருத்துவச் செலவுகள் இலவசமாக வழங்கப்படும்.
அதிக ஆபத்துள்ள வேலை செய்யும் ஸ்டண்ட் கலைஞர்களுக்குப் பெரும்பாலும் சரியான பாதுகாப்பு உபகரணங்கள் அல்லது மருத்துவ ஆதரவு இருக்கும். அவர்களில் பெரும்பாலோருக்கு காப்பீடு குறைவாகவோ அல்லது காப்பீடு இல்லாமலோ உள்ளது. அதாவது ஒரு சிறிய காயம் கூடப் பெரிய மருத்துவ செலவுகள் மற்றும் வருமான இழப்புக்கு வழிவகுக்கும். ஒரு விபத்து அவர்களின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றிவிடும் என்பதை அறிந்து அவர்களின் குடும்பங்கள் தொடர்ந்து கவலையில் வாழ்கின்றன. அக்ஷய் அவர்களுக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளார்.
இந்தத் திட்டம், ஸ்டண்ட் கலைஞர்களின் நலனுக்காக மேற்கொள்ளப்படும் ஒரு முன்னோடியான நடவடிக்கையாகக் கருதப்படுகிறது. படத்துறையில் பெரும் ஆபத்துகளுக்கு முகம் கொடுக்கும் இக்கலைஞர்களின் வாழ்க்கையில் பாதுகாப்பு சிறிது கூடுதல் உறுதிப்படுத்தப்படுவதாகவும், இது எதிர்காலத்தில் மற்ற நடிகர்களுக்கும் உந்துசக்தியாக அமையலாம் எனவும் திரைத்துறையினர் பெருமையாகக் கூறியுள்ளனர்.