உலகம்

இலங்கையில் கண்டெடுக்கப்பட்ட 65 சிறுமிகளின் எலும்புகள்...செம்மணியில் மீண்டும் பரபரப்பு

செம்மணி பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ள 65 சிறுமிகளின் எலும்புகளுடன் பள்ளிப் பைகள் மற்றும் பொம்மைகள் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 இலங்கையில் கண்டெடுக்கப்பட்ட 65 சிறுமிகளின் எலும்புகள்...செம்மணியில் மீண்டும் பரபரப்பு
இலங்கையில் கண்டெடுக்கப்பட்டுள்ள சிறுமிகளின் எலும்புக்கூடுகள்
இலங்கையில் கொழும்புவில் உள்ள செம்மணி என்ற பகுதியில் புதைக்குழியில் இருந்து 4 முதல் 5 வயதில் 65 சிறுமிகளின் எலும்புக்கூடுகள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.யார் இவர்கள், போரில் கொல்லப்பட்டவர்களா இல்லை பெற்றோர்களிடம் இருந்து பிரித்து தடுத்து வைக்கப்பட்டவர்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு

வடக்கு யாழ்ப்பாணத்தில் உள்ள செம்மணி பகுதியில் சமீபத்தில் ஏராளமான மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டது.இவர்கள் இலங்கை போரில் கொல்லப்பட்டவர்களா? என்ற கேள்வி எழுந்தது. முன்னதாக கடந்த 1998ம் ஆண்டில் செம்மணி ஏராளமான தமிழர்கள் கொன்று புதைக்கப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. இதைத்தொடர்ந்து நடந்த அகழ்வாய்வு பணியில் 15 எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டன.ஆனால் அதன் மீது எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

தற்போது மீண்டும் அதே பகுதியில் ஏராளமான எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. எலும்புகளுடன் பள்ளிப் பைகள், பொம்மைகளும் இருந்ததாக நேரில் கண்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பள்ளிப்பைகள், பொம்மைகள் இருந்ததால் அதிர்ச்சி

கடந்த 1990ம் ஆண்டு விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை ராணுவத்திற்கும் இடையே நடந்த போரில் கொல்லப்பட்டவர்கள் செம்மணி புதைகுழியில் புதைக்கப்பட்டிருப்பதாக 1998ம் ஆண்டு வெளி உலகிற்கு தெரியவந்தது.அப்போது சில எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டது. ஆனால் அதன் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

செம்மணி பகுதியில் அதன்பிறகு நடந்த சீரமைப்பு பணிகளின் போது மேலும் பல மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டது. இது குறித்து விசாரித்த யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிமன்றம் மனித எலும்புகள் கண்டெடுக்கப்பட்ட இடத்தினை மனிதப் புதைகுழி என அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த நிலையில் தான் 4-5 வயது உள்ள 65 சிறுமிகளின் எலும்புக்கூடுகள் பள்ளிப்பை மற்றும் பொம்மைகளுடன் மீட்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.சிறுமிகளின் எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டது தொடர்பாக முறையான விசாரணை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.