இந்தியா

ரூ.50 நாணயம் அறிமுகம்?- மத்திய அரசு கொடுத்த விளக்கம்

ரூ.50 நாணயங்கள் அறிமுகப்படுத்தும் திட்டம் குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது

ரூ.50 நாணயம் அறிமுகம்?- மத்திய அரசு கொடுத்த விளக்கம்
டெல்லி உயர்நீதிமன்றம்
பார்வைக் குறைபாடு உடையவர்கள் 50 ரூபாய் தாள்களை கண்டறிய சிரமம் இருப்பதாக கூறி வழக்கறிஞர் ரோஹித் தண்ட்ரியால் என்பவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

ரூ.50 பணத்தாள்கள்

50 ரூபாய் பணத்தாள்களில் தொட்டு உணரக்கூடிய குறிப்பான்கள் இல்லை என்றும் மற்ற பணத்தாள்களைப் போன்று 50 ரூபாய் தாள்களை அடையாளம் காணுவது பார்வைக் குறைபாடு உடையவர்களுக்கு கடினமாக உள்ளது அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள், கடந்த 2022ம் ஆண்டில் ரிசர்வ் வங்கி மேற்கொண்ட கணக்கெடுப்புகளை விவரிக்கையில், நாணங்களின் எடை, அளவு மற்றும் தனித்துவம் இல்லாத காரணத்தை அவற்றை பயனர்கள் தவிர்க்கின்றனர். ஆனால் இவையெல்லாம் தான் பணத்தாள்களை அன்றாட பயன்பாட்டுக்கு மிகவும் நடைமுறைப்படுத்தும் காரணிகள் என்று மத்திய அமைச்சகம் கூறினார்.

மத்திய அரசு விளக்கம்

இதைத்தொடர்ந்து, ரூ.10 மற்றும் ரூ.20 போன்ற நாணயங்களை விட தாள்களுக்குத் தான் மக்கள் பரவலாக முன்னுரிமை அளிக்கின்றனர். தற்போது ரூ.50 நாணயத்தை அறிமுகப்படுத்தும் திட்டம் எதுவும் பரிசீலனையில் இல்லை என்று மத்திய அமைச்சகம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

இதையடுத்து, ரிசர்வ் வங்கியின் பிரமாணப் பத்திரத்தை மறுஆய்வு செய்து, பதிலளிக்க வழக்கறிஞருக்கு கால அவகாசம் அளித்து வழக்கின் அடுத்த விசாரணையை செப்டம்பர் 17ம் தேதிக்கு ஒத்திவைத்தது.