நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் பங்கேற்காதது அடையாள போராட்டம் - திருமாவளவன்
நிதி ஆயோக் கூட்டங்களில் தமிழக முதல்வர் பங்கேற்காமல் எதிர்ப்பு தெரிவித்தது ஒரு அடையாள போராட்டம் என்று திருச்சி விமான நிலையத்தில் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
நிதி ஆயோக் கூட்டங்களில் தமிழக முதல்வர் பங்கேற்காமல் எதிர்ப்பு தெரிவித்தது ஒரு அடையாள போராட்டம் என்று திருச்சி விமான நிலையத்தில் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் கடந்த 3 மாதங்களில், கேட்பாரற்றுக் கிடந்த உடமைகளில் இருந்து, ரூ.1.3 கோடி மதிப்புடைய, தங்கம், தடை செய்யப்பட்ட சக்தி வாய்ந்த ட்ரோன்கள், விலை உயர்ந்த கைக்கடிகாரம், நட்சத்திர ஆமைகள் ஆகியவற்றை, சுங்கத்துறை கைப்பற்றி தொடர்ந்து விசாரணை நடத்தினர்.
ஆற்காடு அருகே அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் போதிய பாதுகாப்பு வசதி இல்லாததால் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையால் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து, நெற்பயிர்கள் முளைத்து காணப்படுவதாக விவசாயிகள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.
வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெறு சட்டசபை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் என்று திருச்சி விமான நிலையத்தில் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் சிவகிரியில் வயதான விவசாய தம்பதியினர் இரட்டை கொலை வழக்கில் நகைகளை உருக்கி கொடுத்த நகை வியாபாரி கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், இவ்வழக்கில் இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ஜூன் 2 வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் உரிய ஆவணம் இன்றி கொண்டுவரப்பட்ட 38 லட்சம் ரூபாய் பணம் ரயில்வே போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்தியாவிலேயே முதல்முறையாக ஆரம்ப சுகாதார நிலையங்களில் டயாலிசிஸ் செய்யும் வசதி கொண்டுவர உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இருந்து இலங்கை சென்ற ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பஹல்காமில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் தப்பிச் சென்றார்களா? என்று இலங்கை விமான நிலையத்தில் பாதுகாப்பு படையினர் சோதனையில் ஈடுபட்டனர்.
புழல் சிறையில் கைதிகள் பதுக்கி வைத்திருந்த போதை மாத்திரை காணாமல் போனதால் கைதியை தாக்கிய 7 கைதிகள் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
காவிரி ஆற்றின் குறுக்கே பராமரிப்பு பணிகள் தொடங்கி நடைபெற்று வருவதால், விசைப்படகு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் அப்பகுதி பொது மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வடமாநிலத்தை சேர்ந்தவரை ஊன்றுகோலால் அடித்துக்கொன்ற மாற்றுத்திறனாளியை காவல்துறையினர் கைது செய்தனர்.
என் பாசத்துக்குரிய பரந்தூர் மக்களே, நம்பிக்கையோடு இருங்கள், நாளை நமதே என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
சென்னை மற்றும் புறநகர் பகுதியில் பெய்த திடீர் மழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் 10-க்கும் மேற்பட்ட விமானங்கள் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்தன.
முதல் கட்ட கட்டுமான பணிகள் ரூ.11,455 கோடி செலவில் வரும் ஜனவரி மாதம் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
கோவை ரயில் நிலையத்தில், ரயில்வே காவல் துறையினர் சோதனையில் ஈடுபட்ட போது, 62 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 5 பெண்கள் உட்பட 6 பேர் கைதாகியுள்ளனர்.
சென்னை விமான நிலையத்தில் கோடை விடுமுறையையொட்டி பயணிகள் கூட்டம் அதிகரிக்க தொடங்கியதால், சர்வதேச முனையத்தில் செக்-இன் கவுண்டர்கள் 120 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 11 மீனவர்கள் இதில் இரண்டு மீனவர்கள் தலா 80 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்திய பின் விடுதலை செய்யப்பட்ட நிலையில் அனைவரும் சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர்.
கும்பகோணம் ரயில் நிலையம் 100 கோடி ரூபாய் திட்ட மதிப்பில் முற்றிலும் புனரமைக்கப்பட உள்ளதாக தென்னக ரயில்வேயின் பொது மேலாளர் ஆர்.என்.சிங் இன்று (மார்ச்.21) கும்பகோணத்தில் ரயில் நிலையத்தை ஆய்வு செய்தவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் பழநி பேருந்து நிலையத்தில் ரகளையில் ஈடுபட்ட போதை ஆசாமி
மதுரை நெற்கொள்முதல் நிலையத்தில் நிலைய அலுவலர் முறைகேடு செய்ததால், நெற்பயிர்கள் முளைத்தும், வெடித்தும் வீணாகி சேதம் அடைந்துள்ளதாக மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
150க்கும் மேற்பட்ட ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளனர் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மர்
சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட விண்வெளி வீரர்கள் பூமிக்கான பயணத்தை தொடங்கினர்
மதுரை ரயில் நிலையத்திற்குள் மேற்கு வங்காளத்தில் இருந்து நெல்லைக்கு 8 கிலோ கஞ்சாவை கடத்தி சென்ற வந்த சிறுவன் உள்பட மூவர் மதுரை ரயில் நிலையத்தில் கைது செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ராக்கெட்டில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு காரணமாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கியுள்ள விண்வெளி வீரர்களை பூமிக்கு அழைத்து வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
சென்னை விமான நிலைய மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் 56-வது ஆண்டு விழாவை முன்னிட்டு விமான நிலையத்தில் பாதுகாப்பு பிரிவில் பணியில் ஈடுபடும் மோப்ப நாய்களின் ஒத்திகையில் ஈடுபட்டனர்.