குற்ற வழக்கில் கைதான பூபாலன் என்பவர், சென்னை புழல் மத்திய சிறையில் விசாரணை கைதிகள் அறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதே சிறையில் அயப்பாக்கம் பகுதியை சேர்ந்த திவாகரன், ஆடு மணி, சரவணன், தினேஷ், ராஜசேகர், அலெக்சாண்டர் உள்ளிட்ட விசாரணை கைதிகளாக அடைக்கப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில் கைதி பூபாலன் போதை மாத்திரைகள் சிலவற்றை திவாகரன் பையில் வைத்திருந்ததாக கூறப்படுகிறது. நேற்று பூபாலன் சக கைதி திவாகரன் பையை திறந்து பார்த்த போது, அதில் வைத்திருந்த போதை மாத்திரைகள் காணாமல் போனதால், அது குறித்து அவரிடம் கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது திவாகரன் தனக்கு தெரியாது என கூறியதுடன் சிறையில் தன்னுடன் உள்ள மற்றொரு சிறைவாசியான கொளத்தூரை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரிடம் சென்று பையில் வைத்திருந்த போதை மாத்திரையை எடுத்தாயா என கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். அதற்கு கோவிந்தராஜ் தான் எடுக்க வில்லை என கூறியும் அதனை நம்பாத கைதி திவாகரன் தனது கூட்டாளிகள் ஆடுமணி, சரவணன், அலெக்சாண்டர், தினேஷ், ராஜசேகர் ஆகியோருடன் சேர்ந்து கோவிந்தராஜை அடித்து உதைத்துள்ளனர்.
பின்னர், அங்கு வந்த சிறை காவலர்கள் இருதரப்பினரையும் தடுத்து நிறுத்தி சிறையில் அடைத்தனர். பின்னர் காயமடைந்த கைதி கோவிந்தராஜ் சிறையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சிறையில் நடந்த இந்த மோதல் சம்பவம் குறித்து சிறை அதிகாரி சிவராஜ், நேற்று புழல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.