K U M U D A M   N E W S

இனி மதுரை விமான நிலையம் 24 மணி நேரமும் செயல்படும்.. என்ன காரணம் தெரியுமா?

மதுரை விமான நிலையம் நாளை (அக்டோபர் 1) முதல் 24 மணி நேரம் செயல்படும் என மதுரை விமான நிலைய இயக்குநர் முத்துக்குமார் அறிவித்துள்ளார். 

விமான பயணம்... மதுரை மக்களுக்கு குட் நியூஸ்...

மதுரை விமான நிலையம் நாளை முதல் 24 மணி நேரமும் செயல்படும் என மதுரை விமான நிலைய இயக்குநர் முத்துக்குமார் அறிவித்துள்ளார். காலை 6.55 மணி முதல் இரவு 9.25 மணி வரை மட்டுமே மதுரை விமான நிலையம் செயல்பட்டு வந்த நிலையில் தற்போது 24 மணி நேரமும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பாளர்கள் கைது

காஞ்சிபுரத்திற்கு வருகை தரவுள்ள முதலமைச்சரை சந்தித்து போராட்ட குழுவினர் மனு அளிக்க இருந்த நிலையில் பரந்தூர் பசுமைவெளி விமான நிலைய திட்ட எதிர்ப்பு குழுவினரை போலீசார் கைது செய்தனர்.  

பரந்தூர் விமான நிலைய திட்ட எதிர்ப்பு குழுவினர் எடுத்த திடீர் முடிவு..

பரந்தூர் விமான நிலைய திட்ட எதிர்ப்பு குழுவினர் வரும் 28ம் தேதி காஞ்சிபுரத்தில் திமுக பவள விழா நடைபெறும் இடத்துக்கு பேரணியாக செல்ல முடிவெடுத்துள்ளனர். அங்கு முதலமைச்சரை சந்தித்து மனு கொடுக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கனமழை எதிரொலி – விமான சேவை பாதிப்பு

பலத்த காற்றுடன் பெய்த மழையால், சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டது.

Chess Olympiad 2024 : தங்கம் வென்ற தங்கப்பிள்ளைகள்.., Airport–ல் மக்கள் ஆரவாரம்

Tamil Nadu Players Won in Chess Olympiad 2024 : செஸ் ஒலிம்பியாட்டில் வென்ற தமிழகத்தின் தங்க மகன், மகளுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு. பலமான எதிராளிகளை சமாளித்து வென்றது மன நிறைவாக இருப்பதாக கூட்டாக பேட்டி.

குவிந்த பக்தர்கள்.. ஸ்தம்பித்த ரயில் நிலையம்..

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் பௌர்ணமி கிரிவலம் முடித்துக்கொண்டு சொந்த ஊர்களுக்கு செல்ல திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். ரயிலில் இடம் இல்லாததால் ரயில் நிலையத்திலேயே பொதுமக்கள் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது 

#BREAKING : மதுரையில் விரைவில் 24 மணி நேர விமான சேவை | Kumudam News 24x7

Madurai Airport: அக்டோபர் முதல் மதுரை விமான நிலையம் 24 மணி நேர சேவையை தொடங்க உள்ளதாக தகவல். 

அரசு பள்ளியில் சர்ச்சை பேச்சு - மகாவிஷ்ணு கைது?

அரசுப்பள்ளிகளில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்த மகாவிஷ்ணுவை சென்னை விமான நிலையத்தில் வைத்து போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மகாவிஷ்ணுவிடம் போலீசார் விசாரணை?

அரசுப்பள்ளிகளில் ஆன்மிக சொற்பொழிவு நடத்தி சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்த மகாவிஷ்ணுவிடம் போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மகா விஷ்ணு அதிரடி கைது.. விமான நிலையத்தில் தட்டித்தூக்கிய போலீஸ்.. என்ன நடந்தது?

இந்த சம்பவம் குறித்து ஆஸ்திரேலியாவில் இருந்து வீடியோ வெளியிட்ட மகா விஷ்ணு, ''நான் பேசியதில் என்ன தவறு உள்ளது? நான் எங்கும் ஓடி ஒளியவில்லை. நாளையே சென்னை வந்து இது குறித்து போலீசிடம் விளக்கம் அளிக்க உள்ளேன்'' என்று விளக்கம் அளித்தார்.

பரந்தூர் விமான நிலையம்.. அறிக்கை தயாரிக்க டெண்டர் வெளியிட்டது தமிழக அரசு

பரந்தூர் விமான நிலையம் திட்டத்திற்கான பெருந்திட்ட அறிக்கை மற்றும், திட்டத்தின் வரைபடம் தயாரிக்க ஆலோகர்களை தேர்ந்தெடுப்பதற்கான ஒப்பந்தப்புள்ளியை தமிழக அரசு அறிவித்துள்ளது. 

விமான நிலையமா? வில்லங்க நிலையமா? அரசுக்கு எதிராக திரண்ட மக்கள் - பரந்தூரில் நடப்பது என்ன?

Pandur Airport: மக்களை கேட்காமல் வேக வேகமாக பரந்தூர் விமான நிலையத்தை அமைக்க கையகப்படுத்தும் அரசை எதிர்த்து உரிமையை கோரி போராடும் மக்களை கூண்டில் அடைக்கும் போலீஸ்

BREAKING | Ekanapuram Villagers Case : ஏகனாபுரம் கிராம மக்கள் மீது வழக்குப்பதிவு

Ekanapuram Villagers Case : ஏகனாபுரம் கிராம மக்கள் 125-க்கும் மேற்பட்டவர்கள் மீது சுங்குவார்சத்திரம் காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்

5 மணி நேரம் பதற்றத்தில் இருந்த போலீஸார்.. முதலமைச்சர் சென்ற விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்...

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா புறப்படுவதற்கு முன், விமான நிலையத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டல் புரளியால் பரபரப்பு ஏற்பட்டது.

#BREAKING | பரந்தூர் விமான நிலையம்.. விறுவிறு பணிகள்.. அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு

பரந்தூர் விமான நிலையம் அமைக்க ஏகனாபுரம் கிராமத்தில் நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை முதல் நிலை அறிவிப்பை வெளியிட்டது தமிழக அரசு.

#BREAKING | பரந்தூர் விமான நிலையம் - 765வது நாளாக போராட்டம்

பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் கிராம மக்கள் 765-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

DMK Executive : திமுக பெண் நிர்வாகி காவல் நிலையத்தில் அராஜகம்.. போலீஸாருக்கு சவால்...

DMK Women Executive Atrocity in Polica Station in Thousand Lights : விளக்க கடிதத்தை கிழித்து போட்டுவிட்டு உங்களால் என்ன செய்ய முடியுமோ? பார்த்துக் கொள்ளுங்கள் என போலீசுக்கு சவால் விட்டு சென்ற திமுக பெண் நிர்வாகியால் பரபரப்பு ஏற்பட்டது.

குரங்கு அம்மை: மதுரை விமான நிலையத்தில் பரிசோதனை மையம் தொடக்கம்!

மதுரை விமான நிலையத்தில் வரும் பயணிகளுக்கு குரங்கு அம்மை நோய்க்கான சிறப்பு பரிசோதனை மையத்தை சுகாதாரத்துறை இணை இயக்குநர் Dr. குமரகுரு இன்று (ஆகஸ்ட் 21) தொடங்கி வைத்தார்.

சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு; பயணிகளுக்கு புதிய விதிமுறைகள்!

ஆகஸ்ட் 15ம் தேதி 78வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.

கூலிப்படை தலைவன் பில்லா கைது.. விமான நிலையத்தில் தட்டித் தூக்கிய போலீஸார்..

Mercenary Leader Billa Arrest : திருவண்ணாமலையில் பிரபல நகைக் கடை அதிபர் மகன்கள் கடத்தல் வழக்கில் கூலிப்படை தலைவன் பில்லா மும்பை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.