K U M U D A M   N E W S

பாடலாசிரியருக்கு நேர்ந்த விபரீதம்.. தரக்குறைவாக பேசிய தயாரிப்பாளர்.. போலீசில் புகார்!

தேசிய விருது பெற்ற பாடலாசியர் பா.விஜய்க்கு பாடல் எழுதுவதற்கு அட்வான்ஸ் கொடுத்துவிட்டு, ஒன்றரை வருடம் கழித்து, அவரை தரக்குறைவாக பேசி பணத்தை திருப்பி கேட்ட பெண் தயாரிப்பாளர் மீது கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது

உயிரை காக்க சென்னைக்கு கொண்டுவரப்பட்ட மொரிசியஸ் குழந்தை...நடுவானில் நடந்த சோகம்

குழந்தையை இழந்த மொரிசியஸ் தம்பதி விமானத்துக்குள் கதறி அழுதது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

அருப்புக்கோட்டையில் மாற்றப்பட்ட பேருந்து நிலையம்... அல்லோலப்படும் மக்கள்

அருப்புக்கோட்டையில் புதிதாக ஸ்மார்ட் பேருந்து நிலையம் கட்டப்பட்டு வரும் நிலையில், அதன் அருகே அமைக்கப்பட்ட தற்காலிக பேருந்து நிலையம் தற்போது வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளதால் அடிப்படை வசதிகளில் இல்லாமல் பயணிகள் சிரமம் அடைகின்றனர்.

போலி ஆதார் அட்டை.. இந்திய பாஸ்போர்ட் பெற்று வெளிநாடுகளுக்கு தப்ப முயன்ற 7 பேர் கைது!

போலி ஆதார் அட்டைகளை தயாரித்து இந்திய பாஸ்போர்ட் பெற்று வெளிநாடுகளுக்கு செல்ல முயன்ற 7 பேரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

விமான பயணியிடம் துப்பாக்கி தோட்டா பறிமுதல்.. கோவை விமான நிலையத்தில் பரபரப்பு!

கோவை விமான நிலையத்தில் ஒரு பயணியிடம் இருந்து துப்பாக்கி தோட்டா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து பீளமேடு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்

14 நாள் தனிமைப்படுத்தப்பட்ட இந்திய விண்வெளி வீரர்.. நாசா கொடுத்த முக்கிய அப்டேட்..!

சர்வதேச விண்வெளி நிலையம் செல்லும் முதல் இந்திய வீரர் ஷுபான்ஷு சுக்லா, 14 நாள் தனிமைக்கு அனுப்பப்பட்டுள்ளார். விண்வெளி செல்லும் 3 வீரர்களையும், நாசா குழுவினர் உடல்நிலையை தகுதிப்படுத்தும் குவாரண்டைனுக்கு அனுப்பிவைத்து வாழ்த்து தெரிவித்தனர்.

நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் பங்கேற்காதது அடையாள போராட்டம் - திருமாவளவன்

நிதி ஆயோக் கூட்டங்களில் தமிழக முதல்வர் பங்கேற்காமல் எதிர்ப்பு தெரிவித்தது ஒரு அடையாள போராட்டம் என்று திருச்சி விமான நிலையத்தில் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

விமான நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த பொருட்கள் – சுங்கத்துறை விசாரணை

சென்னை விமான நிலையத்தில் கடந்த 3 மாதங்களில், கேட்பாரற்றுக் கிடந்த உடமைகளில் இருந்து, ரூ.1.3 கோடி மதிப்புடைய, தங்கம், தடை செய்யப்பட்ட சக்தி வாய்ந்த ட்ரோன்கள், விலை உயர்ந்த கைக்கடிகாரம், நட்சத்திர ஆமைகள் ஆகியவற்றை, சுங்கத்துறை கைப்பற்றி தொடர்ந்து விசாரணை நடத்தினர்.

மழையில் நனைந்த நெல் மூட்டைகள்: நேரடி கொள்முதல் நிலையங்களால் விவசாயிகள் வேதனை!

ஆற்காடு அருகே அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் போதிய பாதுகாப்பு வசதி இல்லாததால் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையால் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து, நெற்பயிர்கள் முளைத்து காணப்படுவதாக விவசாயிகள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.

2026-ல் திமுக தலைமையிலான கூட்டணி நிச்சயம் - திருமாவளவன் பேட்டி

வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெறு சட்டசபை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் என்று திருச்சி விமான நிலையத்தில் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.