அரசியல்

2026-ல் திமுக தலைமையிலான கூட்டணி நிச்சயம் - திருமாவளவன் பேட்டி

வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெறு சட்டசபை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் என்று திருச்சி விமான நிலையத்தில் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

2026-ல் திமுக தலைமையிலான கூட்டணி நிச்சயம் - திருமாவளவன் பேட்டி
2026-ல் திமுக தலைமையிலான கூட்டணி நிச்சயம் - திருமாவளவன் பேட்டி
திருச்சி மாவட்டம் துறையூரில் நடைபெற உள்ள பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு வருகை தந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியில் தலைவரும், சிதம்பர நாடாளுமன்ற உறுப்பினருமான, திருமாவளவன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்..,

திருச்சியில் 31ஆம் தேதி நடைபெற இருந்த மத சார்பின் காப்போம் பேரணி ஜூன் மாதம் 14ஆம் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்தப் பேரணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் மட்டுமின்றி, சட்டத்தின் மீதும், மதசார்பின்மை, ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை உள்ள அனைவரும் இந்த பேரணிகள் கலந்து கொள்ள வேண்டும் என்று கூறினார்.

பல்கலைக்கழக விவாகரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் வகையில் குடியரசு தலைவரை கொண்டு பா.ஜ.க அரசு 14 கேள்விகளை கேட்க வைத்துள்ளது.

இந்தியா கூட்டணி வலிமையாக இல்லை என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார் என்ற கேள்விக்கு பதிலளித்த திருமாவளவன், அவர் எதன் அடிப்படையில் கூறினார் என்று தெரியவில்லை. ஆனால், இந்தியா கூட்டணி நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் சந்தித்து ஒரு வருடம் ஆகிறது. தேவைப்படும் போது ஒன்றிணைந்து செயல்படும் என்று கூறினார்.

திமுக இந்திய கூட்டணியில் முக்கியமாக உள்ளது. தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணி தான் கூட்டணி என்கிற வடிவத்தோடு இருக்கிறது. வேறு எந்த கூட்டணியும் கூட்டணி என்கிற வடிவத்தோடு இல்லை.

அதிமுக, பாஜக இணைந்து தேர்தலை சந்திப்போம் என கூறியுள்ளார்கள். ஆனால் அவர்கள் கூட்டணி தொடருமா என்பது தெரியவில்லை.

அவர்கள் கூட்டணியில் அங்கம் வகித்த பாமக, தேமுதிக உள்ளிட்டவர்கள் கூட்டணி குறித்து எந்த நிலைப்பாடும் எடுக்கவில்லை. தற்போது எதிர்க்கட்சிகள் ஐக்கியமாக போதிய முகாந்திரங்கள் இல்லை என்ரு குறிப்பிட்டார்.

தமிழ்நாட்டில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வலுவாக உள்ளது. வரும் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் என தெரிவித்தார்.

பேட்டியின் போது திருச்சி கரூர் மண்டல செயலாளர் தமிழாதன், தொழிலாளர் விடுதலை முன்னேறியின் மாநில துணைச் செயலாளர் பிரபாகரன், பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் கிட்டு, மாவட்ட செயலாளர்கள் புல்லட் லாரன்ஸ், கனியமுதன், சக்திஆற்றலரசு, குருஅன்புச்செல்வம் ஆகியோர் உடன் இருந்தனர்.