K U M U D A M   N E W S
Promotional Banner

விஜய் யார் வாக்குகளை பிரிப்பார் என்று தெரியாது? MP கார்த்தி சிதம்பரம் பேட்டி

’ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு கோட்பாடு இருப்பதாகவும், அதனை முன்வைத்துதான் விமர்சனம் செய்வார்கள் என்றும், ஒரு கூட்டணியில் இருந்து கொண்டு விமர்சனம் செய்வது தவறு கிடையாது என்றும்’ எம்பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

இந்தியா கூட்டணியின் ஒரு செங்கலைக்கூட அசைக்க முடியாது- செல்வப்பெருந்தகை பேச்சு

”தென்காசி மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் 25,000 முதல் 30,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற கடுமையாக உழைக்க வேண்டும்” என தொண்டர்கள் மத்தியில் காங்கிரஸ் கட்சியின் தமிழகத் தலைவர் செல்வப்பெருந்தகை பேசியுள்ளார்.

காங்கிரஸ் ரூட்டில் கமலாலயம்.. புதிய நிர்வாகிகள் பட்டியல் வெளியீடு எப்போது?

புதிய நிர்வாகிகள் பட்டியலை தயார் செய்து டெல்லிக்கு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அனுப்பியுள்ள நிலையில், அதனை வெளியிடுவதில் ஏற்பட்டுள்ள காலதாமதத்திற்கு சீனியர்கள் தான் காரணம் என்கிற பேச்சு எழுந்துள்ளது.

என்ன சொல்லப்போகிறார் விஜய்? தொடங்கியது தவெக செயற்குழு கூட்டம்!

செயற்குழு கூட்டத்தில் பங்கேற்க வந்த தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய், கட்சியின் கொள்கை தலைவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

ஜெயலலிதா பாணியில் விஜய்…தவெகவினருக்கு ஆனந்த் போட்ட உத்தரவு

2026ல் சட்டமன்றம் எங்கள் கையில் இருக்கும் என தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் சங்கரன்கோவில் பொதுக்கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

ஜனவரி 5 வரை வெயிட் பண்ணுங்க..அமித்ஷா கொடுத்த அப்டேட்.!

தேர்தலுக்கு முன்பாக பணப்பட்டுவாடாவிற்கு பாஜக ரெடியாக இருப்பதாகவும், அதற்கு ஜனவரி 5 ஆம் தேதி வரை வெயிட் செய்ய வேண்டும் என்றும் அப்டேட் கொடுத்துள்ள அமித்ஷா, பாஜகவினருக்கு சில முக்கிய டாஸ்குகளை கொடுத்துள்ளதாக கமலாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தமுறை 6 சீட்டுக்கு மேல்.. திட்டமிடும் சிபிஎம்.. செவி சாய்க்குமா திமுக?

வரப்போகிற சட்டசபை தேர்தலில் அதிக தொகுதிகளை கேட்க முடிவு செய்துள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் குமுதம் செய்திகளுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் தெரிவித்துள்ளார்.

மதுரையில் தொடங்கியது திமுக பொதுக்குழு – உதயநிதிக்கு முக்கிய பொறுப்பு?

இன்றைய பொதுக்குழு வரவிருக்கும் சட்டமன்றத்தேர்தலை நோக்கி திமுகவின் நகர்வை வலுப்படுத்தும் ஒரு முக்கியமான கட்டமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2026-ல் திமுக தலைமையிலான கூட்டணி நிச்சயம் - திருமாவளவன் பேட்டி

வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெறு சட்டசபை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் என்று திருச்சி விமான நிலையத்தில் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

அதிமுக vs திமுக: எத்தனை அணிகள் வந்தாலும் இரு துருவ கூட்டணி மட்டும் தான் - திருமாவளவன் பேச்சு

எத்தனை அணிகள் உருவானாலும், திமுக தலைமையிலான கூட்டணிக்கும், அதிமுக தலைமையிலான கூட்டணிக்கும்தான் இரு துருவ போட்டியாக தான் 2026 சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் என்று காஞ்சிபுரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

’தலீவரே தலீவரே தலீவரே..காசு எங்க தலீவரே?' செலவு செய்ய மறுக்கும் விஜய்? நிதி பற்றாகுறையில் தவிக்கும் தவெக?

தவெக தலைவர் விஜய் தேர்தல் பணிகளுக்காக செலவு செய்ய தயங்குவதால், அக்கட்சி நிதி பற்றாகுறையில் தவிப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்...

துணைமுதல்வர் செல்வப்பெருந்தகை? போஸ்டரால் வந்த குழப்பம்..! ஷாக்கில் திமுக தலைமை..!

சென்னையில் ஆங்காங்கே தமிழக காங்கிரஸ் சார்பில், அக்கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகைக்காக போஸ்டர் ஒன்று ஒட்டப்பட்டுள்ளாது. இந்த போஸ்டர் தான் இன்றைய தமிழ்நாடு அரசியல் களத்தின் ஹைலைட்டாக மாறியுள்ளது. அப்படி அந்த போஸ்டரில் இருந்தது என்ன? தமிழக காங்கிரஸ் போடும் தனி ரூட் என்ன? செல்வப்பெருந்தகை வைத்திருக்கும் விளக்கம் என்ன? பார்க்கலாம் இந்த தொகுப்பில்...

“பிளவுவாத பாஜக...மக்கள் விரோத திமுக”- தவெக தலைவர் விஜய் சாடல்

தி.மு.க.வை மறைமுகக் கூட்டாளியாக ஏற்கெனவே தயார் செய்துவிட்ட நிலையில், தன்னுடைய பழைய பங்காளியான அ.இ.அ.தி.மு.க.வைப் பகிரங்கக் கூட்டாளியாகப் பா.ஜ.க. மீண்டும் கைப்பிடித்துள்ளது

2 நாள் பயணமாக சென்னை வந்தடைந்தார் மத்திய அமைச்சர் அமித்ஷா.. இன்று முக்கிய ஆலோசனை!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 2 நாள் பயணமாக சென்னை வந்தடைந்தார். இன்று பாஜக நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று (ஏப்.10) இரவு 11 மணி அளவில் சென்னை வந்த மத்திய அமைச்சரை, மத்திய இணையமைச்சர் எல்.முருகன் மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உட்பட பாஜக நிர்வாகிகள் வரவேற்றனர்.

பாஜக தலைவர் யார்? பரபரப்பான அரசிலயல் சூழலில் மத்திய அமைச்சர் அமித்ஷா இன்று சென்னை வருகை!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று ( ஏப்.10 ) தமிழகம் வருகிறார். பாஜக மாநில தலைவர் மற்றும் சட்டசபை தேர்தல் கூட்டணி தொடர்பான முக்கிய தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.