காஞ்சிபுரத்தில் மே தினத்தையொட்டி மக்கள் மன்றம் சார்பில் நடைபெற்ற பொதுகூட்டத்தில் கலந்துகொள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் காஞ்சிபுரம் வருகை தந்தார். காஞ்சிபுரம் வருகை தந்த தொல் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பிரதமர் தலைமையில் கூடிய ஒன்றிய அமைச்சரவை வரக்கூடிய மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது சாதி வாரி கணக்கெடுப்பை நடத்துவதற்கு முடிவெடுத்திருக்கிறது.
இது மகிழ்ச்சி அளிக்கிறது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வரவேற்று பாராட்டுதல்களை தெரிவித்துக் கொள்கிறோம். காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி எதிர்க்கட்சிகள் அனைத்தும் இந்த கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்து வந்ததை நாடு அறியும்.
பீகார் சட்டசபை தேர்தலுக்கான பரப்புரை தீவிரமாக நடைபெற்று வரும் இந்த சூழ்நிலையில் ராகுல் காந்தி அவர்கள் சாதிவாரி கணக்கெடுப்பை முன்னுறுத்தி பரப்புரையை மேற்கொண்டு வருகிறார். இத்தகைய நெருக்கடியான அரசியல் பரபரப்புக்கு இடையில் பீகார் தேர்தல் பரபரப்புக்கு இடையில் இந்திய ஒன்றிய அமைச்சரவை கூடி இந்த முடிவை எடுத்திருக்கிறது அறிவித்திருக்கிறது. ஆகவே இது பீகார் சட்டப்பேரவை தேர்தலுக்கான ஒரு அவசர நிலைப்பாடாக தான் தெரிகிறது. அடுத்து நடைபெற போகிற மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது 2031 ல் தான் நடக்கும் சூழல் உள்ளது.
ஏனென்றால் 2021 கொரோனா இருந்த சூழலில் மக்கள் தொகை கணக்கெடுப்பு தள்ளிப் போய்விட்டது. அடுத்து 2031இல் நடக்கும். ஆனால், தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த அரசு 2029ல் முடிந்து விடுகிறது. மறுபடியும் நாடாளுமன்ற தேர்தலை சந்தித்து அந்தத் தேர்தலிலே வெற்றி பெற்றால் தான் 2031இல் நடைபெற இருக்கிற மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது தான் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த முடியும்.
எந்த நம்பிக்கையின் அடிப்படையில் இதை இப்போது அறிவித்திருக்கிறார்கள் என்ற கேள்வி, இயல்பாக எழுகிறது. பீகார் சட்டப்பேரவை தேர்தலுக்காக தான் இந்த நிலைப்பாடு என்றாலும் கூட இதனை மகிழ்ச்சியோடு வரவேற்கிறோம், பாராட்டுகிறோம்.
எத்தனை முனை போட்டி நடந்தாலும் இருமுனை போட்டி தான் உண்மையான போட்டியாக இருக்க முடியும். தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில் திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் மக்கள் செல்வாக்கு பெற்றுள்ள கட்சிகள் என்பதை யாரும் மறுக்க முடியாது. அதிமுக தனது பலத்தை குறைத்து மதிப்பிடுவதாக தான் நான் பார்க்கிறேன். அதிமுக ஏற்கனவே பாஜகவோடு 2021ல் சேர்ந்து படிப்பினை பெற்று இருக்கிறது. மறுபடியும் அதே பிழையை அது செய்கிறது. அதிமுக தனித்து நின்றால் கூட அந்த வாக்கு வலிமை குறையப்போவதுமில்லை அதை அதிமுகவே உணராமல் இருக்கிறது என்பதுதான் இங்கே குறிப்பிடத்தக்க ஒன்றாக உள்ளது.
ஆகவே எத்தனை அணிகள் உருவானாலும், திமுக தலைமையிலான கூட்டணிக்கும் அதிமுக தலைமையிலான கூட்டணிக்கும்தான் இரு துருவ போட்டியாக தான் 2026 சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.