Breaking news

என்ன சொல்லப்போகிறார் விஜய்? தொடங்கியது தவெக செயற்குழு கூட்டம்!

செயற்குழு கூட்டத்தில் பங்கேற்க வந்த தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய், கட்சியின் கொள்கை தலைவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

என்ன சொல்லப்போகிறார் விஜய்?  தொடங்கியது தவெக செயற்குழு கூட்டம்!
Tamilaga Vettri Kazhagam Executive Committee Meeting happened at chennai
விஜய் தலைமையில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில செயற்குழுக் கூட்டம் இன்று பனையூரிலுள்ள தவெக அலுவலகத்தில் நடைப்பெற்று வருகிறது.

இந்த கூட்டத்தில் அடுத்த ஆண்டு நடைப்பெறவுள்ள சட்டமன்ற தேர்தல் தொடர்பாக பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட உள்ளது. மேலும் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் வியூகம், விஜய்யின் சுற்றுப்பயணம் தொடர்பாகவும் இந்த கூட்டத்தில் செயற்குழு நிர்வாகிகள் மத்தியில் விவாதிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

தவெக செயற்குழுக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள், சார்பு அணி ஒருங்கிணைப்பாளர்கள் என மொத்தம் 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். செயற்குழு கூட்டத்தில் பங்கேற்க வந்த தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய், கட்சியின் கொள்கை தலைவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

முன்னதாக த.வெ.க. தலைவர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியதால், எடப்பாடி பழனிசாமியால் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட திண்டுக்கல் மேற்கு மாவட்ட இளைஞர் பாசறை நிர்வாகி ஆனந்தகுமார், சென்னையில் புஸ்ஸி ஆனந்தினை இன்று சந்தித்தார். பனையூரில் நடக்கும் த.வெ.க. செயற்குழு கூட்டத்திற்கு வந்த அவருக்கு கட்சியின் துண்டை அணிவித்து புஸ்ஸி ஆனந்த் வரவேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.