அரசியல்

பாஜக தலைவர் யார்? பரபரப்பான அரசிலயல் சூழலில் மத்திய அமைச்சர் அமித்ஷா இன்று சென்னை வருகை!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று ( ஏப்.10 ) தமிழகம் வருகிறார். பாஜக மாநில தலைவர் மற்றும் சட்டசபை தேர்தல் கூட்டணி தொடர்பான முக்கிய தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாஜக தலைவர் யார்? பரபரப்பான அரசிலயல் சூழலில் மத்திய அமைச்சர் அமித்ஷா இன்று சென்னை வருகை!


மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று (ஏப்.10) சென்னை வருகிறார். மத்திய அமைச்சரின் வருகையை தொடர்ந்து, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. நாளை (மார்.11) பாஜகவின் முக்கிய நிர்வாகிகளை சந்தித்து மாநில தலைவர் பதவி குறித்தும், சட்டசபை தேர்தல் கூட்டணி குறித்தும் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பாஜக மாநில தலைவர் யார்?

திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினரும், பாஜக சட்டமன்றக்குழு தலைவருமான நயினார் நாகேந்திரன் (ஏப்.7) இரவு திடீர் டெல்லி பயணம் மேற்கொண்டார். அடுத்த தமிழ்நாடு பாஜக தலைவருக்கான பட்டியலில் அவர் முன்னணியில் இருப்பதாகவும், அமித்ஷா அழைப்பின் பெயரில் டெல்லிக்கு சென்றதாக தகவல் வெளியானது. தொடர்ந்து (ஏப் -8) மத்​திய உள்துறை ​அமைச்​சர் அமித்ஷா மற்றும் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா உள்ளிட்ட பல்வேறு முக்கியத் தலைவர்களை சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டார். இதனைத்தொடந்து பாஜக மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், அதே நேரத்தில் சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், மாநில தலைவர் பதவி மீண்டும் அண்ணாமலைக்கே வழங்கப்படும் என்று அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

சட்டசபை தேர்தல்

தமிழக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கடந்த மாதம் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து பேசினார். அதனால், அதிமுக - பாஜக கூட்டணி மீண்டும் வர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்து டெல்லி சென்ற தமிழக பாஜக. தலைவர் அண்ணாமலை, அமித்ஷா மற்றும் பாஜக.வின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரை சந்தித்து கூட்டணி தொடர்பாக பேசியதாக தகவல் வெளியானது.

பாஜக தமிழக சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வரும் நிலையில், பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் டெல்லியில் இருந்து அமித்ஷா தனி விமானம் மூலம் இன்று சென்னை வருவது பாஜக நிர்வாகிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பலத்த பாதுகாப்பு

சென்னை வரும் மத்திய அமைச்சர் அமித்ஷா கிண்டியில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் 2 நாட்கள் தங்க இருப்பதாகவும், அங்கு பல்வேறு தரப்பினரையும், சந்திக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து அப்பகுதியில் பலத்த போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.