K U M U D A M   N E W S
Promotional Banner

தலைவர்

பகுதி நேர ஆசிரியர்கள்‌ விவகாரம்.. முதலமைச்சர் தான் முதல் எதிரி - சீமான் குற்றச்சாட்டு!

எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபொழுது ஆட்சிக்கு வந்தால் நாங்கள் பகுதி நேர ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்வோம் முதலமைச்சர் எனக் கூறிய முதலமைச்சர் தான் ஆசிரியர்களின் முதல் எதிரி என்று நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டியுள்ளார்.

சட்டசபைக்கு கூட வர முடியாது – தவெக தலைவர் விஜய்க்கு அமைச்சர் துரைமுருகன் பதில்

நடிகர் ரஜினிகாந்துக்கு நான் போன் செய்து பேசி விட்டேன்.ரொம்ப தேங்க்ஸ் சார், இப்போது மறக்காமல் பேசி இருக்கிறீர்கள் என்று அவரிடம் கூறினேன் என அமைச்சர் துரைமுருகன் பேட்டி

‘ககன்யான்’ திட்டம்.. இஸ்ரோ தலைவர் நாராயணன் சொன்ன புதிய தகவல்

“மனிதர்களை விண்வெளிக்கு ராக்கெட்டில் அனுப்பும் ‘ககன்யான்’ திட்டத்தில், ஆளில்லா ராக்கெட் பரிசோதனை வரும் டிசம்பர் மாதம் மேற்கொள்ளப்படும்” என்று இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்தார்.

பரந்தூர் விமான நிலையத்திற்கு பத்திரப்பதிவு தொடக்கம்..அரசியல் தலைவர்களை சந்திக்க போராட்டக்குழு முடிவு!

பரந்தூர் விமான நிலையத்திற்கு நிலம் தர 5 கிராம மக்கள் சம்மதம் தெரிவித்த நிலையில், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களை நேரில் சந்திக்க போராட்டக்குழு முடிவு செய்துள்ளது.

மத்திய அரசு அதானிக்கும், அம்பானிக்கும் செலவு செய்துள்ளது - சிஐடியு தலைவர் சௌந்தரராஜன் குற்றச்சாட்டு!

கடந்த 10 ஆண்டுகளில் 12 லட்சம் கோடி ரூபாய் மத்திய அரசு அதானிக்கும், அம்பானிக்கும் செலவு செய்துள்ளது. பழைய ஓய்வூதிய திட்டத்தினை தமிழக அரசு மீண்டும் கொண்டு வர வேண்டும் என நாங்கள் வலியுறுத்தி வருகிறோம் என்று சிஐடியு தலைவர் சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

ஈரானில் சிக்கிய 15 மீனவர்கள்.. சென்னை வந்தவர்களை வரவேற்ற நயினார் நாகேந்திரன்!

ஈரான் நாட்டில் இருந்து மீட்டு அழைத்து வரப்பட்ட தமிழகத்தை சேர்ந்த 15 மீனவர்களை தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் வரவேற்றார்.

அங்கன்வாடி பணியாளர்களுக்கு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் - நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

தமிழகம் முழுவதும் உள்ள அங்கன்வாடி பணியாளர்களுக்கு தேர்தலின் போது திமுக அளித்த வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

அஜித்குமார் தாக்கப்படும் வீடியோ வெளியிட்ட நபருக்கு பாதுகாப்பு தேவை – திருமாவளவன் வலியுறுத்தல்

அஜித்குமார் படுகொலை வழக்கில் வீடியோ ஆதாரங்களை வெளியிட்ட நபருக்கும் சாட்சிகளுக்கும் துப்பாக்கிய ஏந்திய போலீசார் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

தொடரும் லாக்கப் மரணம்.. முதல்வர் எங்கே ஒளிந்துக் கொண்டிருக்கிறார்? எடப்பாடி பழனிசாமி கேள்வி!

திருப்புவனத்தில் காவல்நிலையத்தில் உயிரிழந்த அஜித்குமாருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும், காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அரசியல் கட்சி தலைவர்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர்.

அஜித்குமாருக்கு நீதி வேண்டும்..சிறப்புப் புலனாய்வுக்குழு அமைத்து விசாரிக்க விஜய் வலியுறுத்தல்

திருப்புவனம் அஜித்குமார் காவல் மரண வழக்கில் உயர்நீதிமன்ற நேரடிக் கண்காணிப்பில், சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து விசாரணை நடத்தி விரைந்து தீர்ப்பு வழங்க வேண்டும் என தவெக தலைவர் விஜய் வலியுறுத்தல்

திருப்புவனத்தில் இளைஞர் மரணம்: வழக்குப்பதிந்து கைது செய்க- தவெக வலியுறுத்தல்

காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் மரணத்தில் தவறிழைத்த காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என தவெக வலியுறுத்தியுள்ளது.

போதைப்பொருள் பயன்படுத்துவோருக்கும் சிறை தண்டனை.. தென்மண்டல NCB தலைவர் எச்சரிக்கை!

போதைப் பொருள் கடத்தல், விற்பனை மட்டுமல்ல, பயன்படுத்துவதும் சட்டப்படி குற்றமே. போதை பொருள் நுகர்வோருக்கும் 6 மாதம் முதல் 2 ஆண்டு சிறை தண்டனை. இந்திய போதை பொருள் தடுப்பு பிரிவு தென்மண்டல தலைவர் அரவிந்தன் தெரிவித்துள்ளார்.

நிதி வேண்டாம்… சாமி வேண்டும்.! வழிக்கு வந்த அண்ணாமலை..? குஷியில் அதிமுக மாஜிக்கள்..!

அதிமுக - பாஜக கூட்டணி மீண்டும் இணைந்தாலும், என் வழி தனி வழி என பயணித்துக் கொண்டிருந்த அண்ணாமலை தற்போது எடப்பாடி பழனிசாமியின் வழிக்கு வந்து விட்டதாக கூறப்படுகிறது. முருக பக்தர்கள் மாநாட்டில் அண்ணாமலை ஆற்றிய உரை பாஜக-வினரை மட்டுமல்லாது அதிமுக தலைவர்கள் மற்றும் தொண்டர்களையும் குஷிப்படுத்தி இருப்பதாகக் கூறப்படுகிறது.

கோவை பேரூர் மடத்தில் ஆர்.எஸ்.எஸ் நூற்றாண்டு விழா.. மோகன் பகவத் பங்கேற்பு

கோவை பேரூர் மடத்தில் ஆர்.எஸ்.எஸ் நூற்றாண்டு விழா விழாவில் பேசிய ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத், நீரை சேமிக்க வேண்டும் பிளாஸ்டிக் பயன்பாட்டை முடிந்தவரை தவிர்க்க வேண்டும் அழிவிற்கு முன்பு நாம் பல்வேறு முன்னெடுப்புகளை நாம் முன்னெடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

முருக பக்தர்கள் மாநாட்டில் பெரியார், அண்ணா புகைப்படங்கள் குறித்த சர்ச்சை.. நயினார் நாகேந்திரன் விளக்கம்!

மதுரையில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில் திராவிடத்தை ஒழிப்போம் என்று அண்ணா, பெரியார் படங்களுடன் வீடியோ வெளியானது குறித்து நான் இன்னும் பார்க்கவில்லை, அதனை பார்த்துவிட்டு பதில் சொல்கிறேன் என பாஜக மாநில தலைவர் நைனார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

சாதிவாரி சர்வே என்றால் முதல்வருக்கு கசப்பது ஏன்? - அன்புமணி கேள்வி

தமிழ்நாட்டில் சாதிவாரி சர்வே உடனடியாக நடத்த வேண்டும் எனவும், சாதிவாரி சர்வே என்றால் முதல்வருக்கு கசப்பது ஏன்? எனவும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்விஎழுப்பியுள்ளார்.

சாதிவாரிக் கணக்கெடுப்பு கண்துடைப்பாக இருக்கக்கூடாது.. விஜய் வலியுறுத்தல்

"மக்கள் தொகைக் கணக்கெடுப்புடன் சேர்ந்த சாதிவாரிக் கணக்கெடுப்பானது உண்மையான சமூக நீதியை நிலைநாட்டுவதாக இருக்க வேண்டும்" என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

பிரிட்டன் உளவுத்துறை MI6 அமைப்பு... முதல்முறையாக பெண் தலைவர் நியமனம்..!

இங்கிலாந்து உளவுத் துறையின் MI6-க்கு தலைவராக முதல்முறையாக பிளேஸ் மெட்ரெவேலி என்ற பெண்மணி நியமிக்கப்பட்டுள்ளார். பிரிட்டன் அரசு உளவுத்துறைக்கு ஒரு பெண் தலைவரை நியமிக்கப்படுவது வரலாற்றுச் சாதனையாக பார்க்கப்படுகிறது.

சமுதாயத்திற்கு, கட்சிக்கும் நான் துரோகம் செய்ய மாட்டேன் - அன்புமணி ராமதாஸ் பேச்சு

என்னுடைய கட்சிக்கும், என்னுடைய சமுதாயத்திற்கும், நான் துரோகம் செய்தால் அது தான் என்னுடைய வாழ்நாளில் கடைசி நாளாக இருக்கும் என அன்புமணி ராமதாஸ் உணர்ச்சி பொங்க தெரிவித்துள்ளார்.

ஆசிரியர்கள் கோரிக்கை நிறைவேற்றாவிட்டால் திமுக 50 தொகுதிகளை இழக்க நேரிடும் - ஐபெக்டோ செயலாளர் அண்ணாமலை எச்சரிக்கை

அரசு ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்றவில்லை என்றால் வருகின்ற 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக 50 தொகுதிகளை இழக்க நேரிடும் என்று ஐபெக்டோ சங்கத்தின் அகில இந்திய தேசிய செயலாளர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

விஜய் எடுப்பார் கைப்பிள்ளையாக செயல்படுகிறார் - ஜவாஹிருல்லா விமர்சனம்!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் எடுப்பார் கைப்பிள்ளையாக செயல்பட்டு வருகிறார் என்று மதுரையில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

தவெகவில் இணைந்த ஐஆர்எஸ் அதிகாரி பெரியார் நினைவிடத்தில் மரியாதை

தவெகவில் இணைந்த ஓய்வு பெற்ற ஐஆர்எஸ் அதிகாரி பெரியார் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.

மாநிலங்களவை தேர்தல்: அதிமுக, திமுக வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல்!

மாநிலங்களவை உறுப்பினா் பதவிக்கான தோ்தலில் அதிமுக, திமுக வேட்பாளா்கள் மற்றும் மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன் ஆகியோா் இன்று வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளனா்.

தவெகவில் அதிருப்தி..? அறிவாலயத்தில் ஆனந்தம்..? திமுகவின் அடுத்த மூவ்!

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் அதிருப்தி நிர்வாகிகளில் எண்ணிக்கை சற்று உயர்ந்து வருவது அறிவாலய வட்டாரத்தில் ஆனந்தத்தை பொங்கச் செய்திருப்பதாக கூறப்படுகிறது இதனால் அந்த அதிருப்தி நிர்வாகிகளில் பட்டியல திமுக கையில் எடுத்திருப்பதாக கூறப்படுகிறது

தி.மு.க பொதுக் குழு கூட்டத்தில் முப்படைக்கு தீர்மானம் நிறைவேற்றி இருக்கலாம் - தமிழிசை சௌந்தரராஜன் ஆதங்கம்

நாட்டின் முப்படை தளபதிகள் வீரர்கள் ஆகியோர் உயிரை பணயம் வைத்து ஆபரேஷன் சிந்தூரை நடத்திக் காண்பித்துள்ள நிலையில் மதுரை தி.மு.க பொதுக் குழு கூட்டத்தில் முப்படையை பாராட்டி ஒரு தீர்மானமாவது நிறைவேற்றி இருக்கலாம் என்று பா.ஜ.க மூத்த தலைவரும், முன்னாள் ஆளுநரமான தமிழிசை சௌந்தரராஜன் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.