கேரள மாநில நடிகர் சங்கமான 'அசோசியேஷன் ஆஃப் மலையாளம் மூவி ஆர்டிஸ்ட்ஸ்' (AMMA)-ன் முதல் பெண் தலைவராக நடிகை ஸ்வேதா மேனன் 'தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்'. சங்கத்தின் 31 ஆண்டு கால வரலாற்றில், ஒரு பெண் தலைமைப் பொறுப்புக்கு வருவது இதுவே முதல் முறையாகும். இந்த வெற்றி, மலையாளத் திரையுலகில் ஒரு 'வரலாற்று மைல்கல்லாக' பார்க்கப்படுகிறது.
முன்னதாக நடைபெற்ற தலைவர் பதவிக்கான தேர்தலில் வெற்றி பெற்று, இந்த உயர்ந்த பொறுப்பை ஸ்வேதா மேனன் ஏற்றுக்கொண்டார். இந்தப் பதவிக்கு வந்ததன் மூலம், இவர் கேரள சினிமாவின் முன்னணி நிர்வாகிகளில் ஒருவராகவும் உருவெடுத்துள்ளார்.
இந்த 'வெற்றிச் செய்தி' ஒருபுறம் இருக்க, மறுபுறம் அவர் சமீபத்தில் ஒரு சர்ச்சையில் சிக்கியிருந்தார். சமீபத்தில் நிதி ஆதாயத்திற்காக ஆபாசத் திரைப்படங்களில் நடித்ததாக இவர்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த விவகாரம் அப்போது சமூகவலைதளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இருப்பினும், அந்த வழக்கை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த ஸ்வேதா மேனன், அந்த வழக்கில் 'இன்டெரிம் ஸ்டே'யையும் பெற்றுள்ளார். ஒருபக்கம் சர்ச்சைகள் சூழ்ந்தாலும், மறுபக்கம் ஒரு வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தியுள்ளார்.