அரசியல்

பகுதி நேர ஆசிரியர்கள்‌ விவகாரம்.. முதலமைச்சர் தான் முதல் எதிரி - சீமான் குற்றச்சாட்டு!

எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபொழுது ஆட்சிக்கு வந்தால் நாங்கள் பகுதி நேர ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்வோம் முதலமைச்சர் எனக் கூறிய முதலமைச்சர் தான் ஆசிரியர்களின் முதல் எதிரி என்று நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டியுள்ளார்.

பகுதி நேர ஆசிரியர்கள்‌ விவகாரம்.. முதலமைச்சர் தான் முதல் எதிரி - சீமான் குற்றச்சாட்டு!
பகுதி நேர ஆசிரியர்கள்‌ விவகாரம்.. முதலமைச்சர் தான் முதல் எதிரி - சீமான் குற்றச்சாட்டு!
தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் பணிபுரிந்துவரும் 12,000 பகுதிநேர ஆசிரியர்கள் தங்களுக்கு ஊதிய உயர்வு மற்றும் பணி நிரந்தரம் வேண்டுமெனக் கடந்த 14 ஆண்டுகளாகத் தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்நிலையில் திமுகவின் தேர்தல் அறிக்கையில் பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என 2016 மற்றும் 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. மேலும் 2021 ஆம் ஆண்டு திமுக தேர்தல் வாக்குறுதி எண் 181-இல் பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆட்சிக்கு வந்து நான்காண்டுகள் ஆகியும் இதுவரை பணி நிரந்தரம் செய்யாமல் இருப்பது பகுதி நேர ஆசிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இதற்காகக் கடந்த எட்டாம் தேதி முதல் சென்னையில் போராட்டம் நடத்தி வந்த பகுதி நேர ஆசிரியர்கள் இன்று டி.பி.ஐ வளாகத்தை முற்றுகையிட முயன்றனர். அப்போது காவல்துறையினர் குண்டுகட்டாகக் கைது செய்து திருவல்லிக்கேணியில் உள்ள சமுதாய நலக் கூடத்தில் அடைத்தனர். பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஆதரவளிக்க நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வருகை தந்த நிலையில் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

பின்னர் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்,

வீடு தேடி அரசு என்று விளம்பரம் செய்யப்படுகிறது. வீடு தேடி அரசு வருகிறது என்று கூறியபோது மக்கள் ரோடு தேடி வரக்கூடிய சூழல் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது.

தமிழ்நாட்டில் ஒரு லட்சம் போராட்டங்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது எனக் கூறப்படுகிறது. இதில் என்ன பெருமை, பெருமைப்பட ஒன்றும் இல்லை ஒரு லட்சம் பிரச்சனைகளை மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்துள்ளார்கள் என்பதுதான் பொருள்.

இன்றைய முதலமைச்சர் அப்பொழுது எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபொழுது பகுதி நேர ஆசிரியர்கள் கோரிக்கை நிறைவேற்றுவதாகக் கூறினார். ஆனால் அவர் கொடுத்து வாக்குறுதியை நிறைவேற்றக் கூறிப் போராட்ட நடைபெற்று வருகிறது ஆட்சிக்கு வந்து நான்காண்டுகள் ஆகியும் கொடுக்க வாக்குறுதி நிறைவேற்றவில்லை. போராடக் கூடியவர்கள் ஆசிரியர்கள் அவர்கள் யார் ? அறிவார்ந்த சமூகத்தையும், அறிவார்ந்தவர்களை உருவாக்குபவர்கள். இந்த நாட்டில் ஆசிரியர்கள், உழவர்கள் போராடுகிறார்கள் என்றால் அது குற்ற சமூகமாகும்.

TNPSC தேர்வுகளில் அரசியல் சார்ந்த கேள்விகள் இடம்பெறாது என டிஎன்பிஎஸ்சி தலைவர் கூறினார். ஆனால் விடியல் ஆட்சிபற்றிய கேள்விகள் உள்ளது ? பெரியார்பற்றிக் கேள்விகள் கேட்கப்படுகிறது ? பெரியார் அப்படி என்ன செய்து விட்டார். வ உ சி, நல்லகண்ணு போன்றவர்களை விடவா அவர் தியாகம் செய்துவிட்டார்.

12000 பேர் பணி நிரந்தரம் செய்யக்கோரி போராடி வருகிறார்கள். மகளிர் உரிமைத்தொகை, தவப்புதல்வன் தொகை இத்தனை தொகைகள் எதற்கு ? வேலையைக் கொடுத்தால் நாங்கள் தாய், தகப்பனை குடும்பத்தைக் காப்பாற்றி விடுவோம். இன்றைக்கும் இலட்சக்கணக்கானோர் அரசுத் தேர்வுகள் எழுதி விட்டுக் காத்து கிடக்கின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.