காஞ்சிபுரத்திலுள்ள 51 வார்டுகளை உள்ளடக்கிய மாநகராட்சியின் மாதாந்திர மாமன்ற உறுப்பினர்கள் கூட்டமானது காஞ்சிபுரம் அண்ணா அரங்கத்தில் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் மாநகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்படவுள்ள பல்வேறு பணிகளுக்கான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
அதிகாரிகள் வாக்குறுதி
கூட்டத்தில் தங்களது வார்டு பகுதிகளுக்கு தேவையான அடிப்படை தேவைகள் குறித்து கவுன்சிலர்கள் மேயர் மற்றும் அதிகாரிகளிடம் முறையிட்டனர். அப்போது பல கவுன்சிலர்கள் தங்களது வார்டு பகுதிகளில் பாதாள சாக்கடை அடைப்பை கூட நீக்க கழிவுநீர் அடைப்பு நீக்கும் வாகனங்கள் வருவதே கிடையாது.
இது குறித்து புகார் தெரிவித்தாலும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறி கவுன்சிலர்கள், மேயர் மற்றும் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக மேயர் மற்றும் அதிகாரிகள் வாக்குறுதி அளித்தனர்.
கவுன்சிலர்கள் அதிருப்தி
மேலும் மாநகர பகுகளில் பல இடங்களில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகளில் அனுமதித்த அளவை விட விதிகளை மீறி கூடுதல் அளவில் வைக்கப்பட்டுள்ளதால் மாநகராட்சிக்கு பல லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக புகைப்பட ஆதரங்களுடன் கவுன்சிலர் கார்த்திக் பரபரப்பு குற்றச்சாட்டினை முன்வைத்தால் மேயர் அதிர்ச்சிக்குள்ளாகினார். மேலும் இது குறித்து உரிய நடவடிக்கை எடுத்திடவும் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
இதேபோல் பில்லிங் சாப்ட்வேரில் பலமாத காலமாக ஏற்பட்டுள்ள பழுதினால் புதிய பாதாள இணைப்பு பெற முடியாமல் பல்வேறு வார்டுகளை சேர்ந்த பல பொதுமக்கள் அவதிப்பட்டு வருவதாகவும், பில்லிங் சாப்ட்வேரில் உள்ள பழுது குறித்து தங்களுக்கு தெரியுமா என கவுன்சிலர் கேள்வி எழுப்பிய நிலையில், தனக்கு அதுகுறித்து தெரியாது என மேயர் பதிலளித்தது கவுன்சிலர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.
நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
இதனால் மாநகராட்சிக்கு வர வேண்டிய பல லட்சம் வருவாய் தடைப்பட்டுள்ளதால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கவுன்சிலர்கள் மேயரிடம் முறையிட்டனர். மேயரும் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
தொடர்ந்து பல்வேறு கவுன்சிலர்கள் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் மாதாந்திர கூட்டம் பரபரப்பாகவே நடைபெற்று முடிவுற்றது.