அப்துல் கலாமின் பயோபிக்கில் நடிக்கும் தனுஷ்...படக்குழு வெளியிட்ட போஸ்டர்
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்று படத்தில் தனுஷ் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்று படத்தில் தனுஷ் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
கத்தோலிக்க திருச்சபையின் 267-வது தலைவராக தேர்வு செய்யப்பட்ட 14 ஆம் லியோ புதிய போப்பாக வத்திகானில் இன்று (மே 19 ) பதவியேற்றார். வாடிகனில் நடைபெற்ற விழாவில் உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் 9 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது வரவேற்கத்தக்கது என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையை அடுத்து, குரோஷியா, நார்வே மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளின் பயணங்களை பிரதமர் மோடி ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக, வெளிநாட்டு பயணங்களை ரத்து செய்துள்ளதாகவும், மேலும், பிரதமர் மற்றும் முக்கிய தலைவர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
மதுரை விமான நிலையத்தில் விஜய்க்கு சால்வை அணிவிக்க வந்தவரை துப்பாக்கி முனையில் வெளியேற்றியதால் பரபரப்பு
ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே வயதான தம்பதி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
நாடு முழுவதும் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்பு அளித்துள்ளனர்.
வரும் சட்டமன்ற தேர்தலில், 234 தொகுதிகளிலும் பாஜக வெற்றிபெறும் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் அறங்காவலர் குழு தலைவராக ஜீவானந்தம் நியமிக்கப்பட்டதை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக வெற்றிக்கழகத்தின் கட்சியின் கொடியில் இடம்பெற்றுள்ள யானை சின்னத்தை பயன்படுத்த தடை கோரிய வழக்கு விசாரணையை ஜூன் 4 ஆம் தேதிக்கு தள்ளிவைத்து சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் அஜித் குமார், கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், சமையல் கலை நிபுணர் தாமு, சிற்பி ராதாகிருஷ்ணன் தேவசேனாதிபதி உள்ளிட்டோர் டெல்லியில் நடைபெற்ற பத்ம விருதுகள் வழங்கும் விழாவில், குடியரத்தலைவரிடம் இருந்து பத்ம விருதுகளைப் பெற்றனர்.
டெல்லியில் நடைபெற்ற பத்ம விருதுகள் வழங்கும் விழாவில், நடிகர் அஜித்குமாருக்கு கலைத்துறையில் சிறந்து விளங்கியதற்கான பத்ம பூஷண் விருதினை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வழங்கினார்.
நடிகர் அஜித் தனது மனைவி ஷாலினி மற்றும் மகள், மகனுடன் டெல்லி சென்றுள்ளார்.
தமிழக வெற்றிக்கழகம் சார்பில் கோவையில் நடைபெற்ற வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கில் விஜய் கலந்துகொண்ட நிலையில், அவரை காண ரசிகர்கள் திரண்ட நிலையில், போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும், திமுக கொடியை சேதப்படுத்தியதாகவும், 2 திமுக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்து பீளமேடு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மனதில் நேர்மையும் கரை படியாத அரசியல் செய்ய வேண்டும் என்ற நோக்கமும் உள்ளது என விஜய் பேச்சு
தவெகவின் கொள்கைத்தலைவர்கள் படங்களுக்கு விஜய் மலர்தூவி மரியாதை செலுத்தினார்
விஜய், திறந்த வாகனத்தில் ஒரு மணி நேர ரோட் ஷோவாக சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்ட மாநாட்டுத் திடலை நோக்கி பயணித்தார்.
தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பூத் கமிட்டி மாநாடு இன்று கோவையில் அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் நடைபெறுகிறது. சென்னையிலிருந்து தனிவிமானம் மூலம் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் கோவைக்கு சென்றுள்ளார். கோவை விமான நிலையத்தில் இருந்து அவர்களுக்கு Y- பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட உள்ளது.
துணைவேந்தர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உதகை சென்றார்
தமிழ் மொழியை கட்டாய மொழியாக அறிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்த நீதிமன்ற வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் இல்லையெனில் புதிய சட்டம் இயற்ற வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டமன்ற தலைவர் கோ.க. மணி வலியுறுத்தியுள்ளார்.
என் பாசத்துக்குரிய பரந்தூர் மக்களே, நம்பிக்கையோடு இருங்கள், நாளை நமதே என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
கோவையில் வரும் ஏப்ரல் 26,27 ஆம் தேதி தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பில் நடைபெறும் பூத் கமிட்டி கூட்டத்தில், அக்கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்ற உள்ளதாக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
சென்னை பாலவாக்கத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை திடீர் டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார். தமிழகத்தில் பாஜக மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் நேற்று (ஏப்.13) பதவியேற்ற நிலையில், முன்னாள் தலைவரின் டெல்லி பயணம் பாஜக அரசியல் வட்டாரத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கட்சியின் தலைவராக நான் முறைப்படி பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதை தேர்தல் ஆணையமும் அங்கீகரித்திருக்கும் நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக நான் தொடர்ந்து செயல்படுவேன் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.