இந்தியாவின் உயரிய விருதுகளான பத்ம விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்றது இதில், தமிழகத்தைச் சேர்ந்த நடிகர் அஜித்குமார், நடிகை ஷோபனா, பறையிசை கலைஞர் வேலு ஆசான், செஃப் தாமு, கிரிக்கெட் வீரர் ரவிசந்திரன் அஷ்வின் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் பத்ம விருதுகளைப் பெற்றனர் இவர்களுக்கு பத்ம விருதுகளை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கினார்
பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் பிரபலங்களுக்கு பத்ம விருதுகளை மத்திய அரசு வழங்கி கவுரவித்து வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான விருதுகளை கடந்த ஜனவரி மாதம் ஜனவரி 25 ஆம் தேதி, குடியரசுத்தினத்தை முன்னிட்டு மத்திய அறிவித்திருந்தது. பல துறைகளிலும் சிறந்து விளங்கிய 113 பேருக்கு பத்ம விருதுகள் இன்று (ஏப்.28) வழங்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்திலிருந்து 19 பேர் இடம்பெற்ற நிலையில், விருது வழங்கப்பட்டது.
கலைத் துறையில் நடிகர் அஜித்குமார், நடிகை ஷோபனாவுக்கும் தொழில் துறையில் தொழிலதிபர் நல்லி குப்புசாமி ஆகியோருக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டது. இதே போல, குருவாயூர் துரை, தெருக்கூத்து கலைஞர் பி.கே.சம்பந்தன். சமையல் கலை நிபுணர் கே.தாமோதரன், புதுச்சேரியைச் சேர்ந்த தவில் வித்வான் கலைஞன் தட்சணாமூர்த்தி, லட்சுமிபதி ராமசுப்பையர், எம்.டி.ஸ்ரீனிவாஸ், புரசை கண்ணப்ப சம்பந்தன், கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், ஆர்.ஜி.சந்திரமோகன், தாள வாத்திய கலைஞர் குருவாயூர் துரை, கும்பகோணம் சிற்பி ராதாகிருஷ்ணன் தேவசேனாதிபதி, ஸ்ரீனி விஸ்வநாதன், மதுரையைச் சேர்ந்த பறையிசை கலைஞர் வேலு ஆசான் ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருதுகள் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் டெல்லியில் உள்ள குடியரசுத்தலைவர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பத்ம விருதுகளை குடியரசுத் தலைவர் திரௌபதி மர்மு வழங்கினார். நடிகர் அஜித்குமார், கிரிக்கெட் வீரர் அஸ்வின் உள்ளிட்டோர் பத்ம விருதுகளை குடியரசுத் தலைவரிடம் இருந்து பெற்றுக் கொண்டனர்.
பத்மபூஷண் விருது பெற்றுள்ள அஜித்குமாருக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோரும் நடிகர் அஜித்குமாரின் ரசிகர்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். நடிகர் அஜித்குமார் மட்டுமில்லாமல் பத்ம விருதுகள் பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள் குவிந்து வருகிறது.