சென்னை, வியாசர்பாடி, முல்லை நகர்ப் பகுதியில் நேற்று ஏற்பட்ட தீவிபத்தில் பல குடிசைகள் தீக்கரையாகின. இதில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு த.வெ.க சார்பில் கழக நிர்வாகிகள் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கிய போது காவல் துறையினர் தாக்கியதாக கூறப்படுகிறது. தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சியின் நிறுவனத் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியுள்ளதாவது,
வியாசர்பாடி, சத்தியமூர்த்தி நகர் பிரதான சாலையொட்டி, 200க்கு மேற்பட்ட குடிசைகளில் ஆயிரக்கணக்கானோர் வசித்து வருகின்றனர். கடந்த 26ம் தேதி மாலை குடிசைகளில் இருந்து கரும்புகை வெளியேறிய நிலையில், தீ மளமளவென அடுத்த குடிசைகளுக்கு பரவி, கொழுந்து விட்டு எரிய துவங்கியது. அனைவரும் பதறியடித்து வெளியேறினர்.
தகவலறிந்து, வியாசர்பாடி, வண்ணாரப்பேட்டை, கொருக்குப்பேட்டை, வ.உ.சி.நகர் உள்ளிட்ட தீயணைப்பு நிலையங்களில் இருந்து, ஆறு வண்டிகளில் 60க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீ அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
தீயணைப்பு வாகனங்களில் தண்ணீர் தீர்ந்த நிலையில், குடிநீர் நிலையங்களில் இருந்து, டேங்கர் லாரிகளில் தண்ணீர் கொண்டு வரப்பட்டது. பின் தீயணைப்பு வீரர்கள், இரண்டு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
தீ அணைக்கப்பட்ட போதிலும் 20 வீடுகள் தீயில் சேதம் அடைந்ததுள்ளது. அந்த பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களை மாவட்ட அமைச்சர் சேகர்பாபு அவர்கள் கூட நேரில் ஆறுதல் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் மாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, உடை உள்ளிட்ட தேவையான பொருட்களை தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் கொடுக்க சென்றனர்.
அமைச்சர் சேகர் பாபு உத்தரவின் பேரில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளை பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து உணவு, உடை தர போலீசார் அனுமதி மறத்ததோடு, தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளிடம் போலீசார் கடுமையாக நடந்து கொண்டிருக்கின்றனர்.
அது மட்டுமின்றி தமிழக வெற்றிக் கழக பெண் நிர்வாகியை காவல் துறையினர் தாக்கியதோடு, அவரது ஆடையை கிழித்துள்ளனார். தமிழக வெற்றிக் கழக பெண் நிர்வாகிக்கு கடுமையாக தாக்கப்பட்டதில், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மக்கள் விரோத ஆட்சியாளர்களின் இந்த கொடுங் செயலையும், அமைச்சர் சேகர் பாபுவின் செயலுக்கும் தமிழ்நாடு முஸ்லிம் லீக் கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறது. மணிப்பூர் மக்கள் குறித்து நீலிக் கண்ணீர் வடிக்கும் ஸ்டாலின், தமிழகத்தில் வியாசர்பாடியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறுவதில் கூட அரசியலாக பார்ப்பது வேதனை அளிக்கிறது.
மனிதாபிமானமற்ற விதமாக நடந்து கொள்ளும் தி.மு.க. அரசுக்கு 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன்.