சினிமா

Padma Awards: பத்ம பூஷன் விருது பெற்றார் நடிகர் அஜித்குமார்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

டெல்லியில் நடைபெற்ற பத்ம விருதுகள் வழங்கும் விழாவில், நடிகர் அஜித்குமாருக்கு கலைத்துறையில் சிறந்து விளங்கியதற்கான பத்ம பூஷண் விருதினை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வழங்கினார்.

 Padma Awards: பத்ம பூஷன் விருது பெற்றார் நடிகர் அஜித்குமார்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித்குமார். நடிப்பு மட்டுமில்லாமல், கார் ரேஸ், ட்ரோன் பயிற்சி வழங்குவது என அனைத்திலும், தன்னுடைய முத்திரையை பதித்து வரும், நடிகர் அஜித்குமாரை பெருமைப்படுத்தும் விதமாக மத்திய அரசு, பத்ம பூஷன் விருதை அறிவித்து பெருமைப் படுத்தியது.

கலை, இலக்கியம், அறிவியல், சமூக சேவை போன்ற பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு மத்திய அரசு இந்த விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது. இந்த மதிப்புமிக்க விருது தமிழ் திரையுலகின் பல நட்சத்திரங்களுக்கு அவர்களின் கலைத்திறனுக்காக வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஜனவரி மாதம் குடியரசு தினத்தை முன்னிட்டு அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து, இன்று டெல்லியில் நடந்த பத்ம விருதுகள் வழங்கும் விழாவில் குடியரசுத் தலைவரின் கையால் பத்ம பூஷன் விருதைப் பெற்றார்.

நடிகர் அஜித் குமார் நடிக்கும் திரைப்படங்கள் உலகம் முழுவதும் வெளியாகி மிகப்பெரிய வரவேற்ப்பை பெற்று வருகிறது. அஜித்குமாருக்கு உலக நாடுகளில் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த குட் பேட் அக்லி திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. பொதுவாக நடிகர் அஜித்குமாரை திரைப்படங்களின் ப்ரோமஷன் நிகழ்ச்சிகளில் கூட பார்க்கமுடியாது. அவ்வப்போது இவர் பங்கேற்கும் கார் ரேஸ்களுக்காக இவர் வெளிநாடுகளில் சாதரணமாக வலம் வருவதால், கடந்த சில மாதங்களாக இவர் பற்றிய செய்திகளும், புகைப்படங்களும் அதிகளவில் வெளிவருகிறது.

நடிகர் அஜித் குமார் சினிமாவில் நடிப்பதைத் தாண்டி, கார் ரேசில் பங்கேற்பதை வாடிக்கையாக கொண்டுள்ளதால், இந்தியாவை பெருமைப்படுத்தும், பல்வேறு வேலைகளை தொடர்ந்து செய்து வருகிறார். வெளிநாடுகளில் நடைபெற்ற கார் ரேஸ்களில், கடந்த சில மாதங்களாக இந்தியாவின் சார்பாக பங்கேற்று முதல் மூன்று இடங்களை தவறாமல் பிடித்து வருகிறார். இந்தியாவின் சார்பாக கார் ரேஸில் கலந்துகொண்டு இந்தியாவின் புகழை உலக நாடுகளுக்கு கொண்டு சென்றதால், தமிழ் சினிமாவில் நடித்து வருவதாலும், கலைத்துறையில் சிறந்து விளங்குவதற்காக அவருக்கு பத்ம பூஷன் விருதை இந்திய அரசு வழங்கியுள்ளது.

டெல்லியில் இன்று (ஏப்.28) குடியரசு தலைவர் திரௌபதி முர்முவின் நடிகர் அஜித் குமாருக்குப் பத்மபூஷன் விருது வழங்கி கவுரவப்படுத்தினார். இந்த நிகழ்ச்சி டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் மாலையில் சிறப்பாக நடைப்பெற்றது. நடிகர் அஜித்திற்கு விருது வழங்கும்போது, மனைவி ஷாலினி, மகள் அனோஷ்கா மற்றும் மகன் ஆத்விக் மற்றும் அஜித்குமாரின் தம்பி என அனைவரும் பங்கேற்றனர். அவர்கள் அனைவரும் எழுந்து நின்று கைதட்டிய வீடியோவும், புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.