ஜனநாயகன் படப்பிடிப்பு
தவெக தலைவரும், நடிகருமான விஜய் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகும் ஜனநாயகன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் நடந்து வருகிறது.
படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக கடந்த மூன்று தினத்திற்கு முன்னதாக மதுரைக்கு புறப்பட்டு சென்றார். மதுரை விமான நிலையத்தில் அவருக்கு உற்சாகமாக வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில் மதுரையில் இருந்து தனி வாகனம் மூலம் கொடைக்கானலுக்கு புறப்பட்டு சென்றார்.
துப்பாக்கி முனையில் வெளியேற்றம்
மூன்று நாள் படப்பிடிப்பை முடித்துவிட்டு மீண்டும் மதுரை விமான நிலையம் வந்தார். அப்போது தவெகவினர் மற்றும் ரசிகர்கள் விஜய்யை பார்த்ததும் ஆரவாரம் செய்தனர். இந்த நிலையில், விஜய் மக்கள் இயக்கத்தின் முன்னாள் மாவட்ட தலைவரான இன்பராஜ் என்பவர் மதுரை விமான நிலையத்திற்கு வருகை தந்த நடிகர் விஜய் சந்தித்து சால்வை அணிவிக்க வருகை தந்தார்.
அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த சிஆர்பிஎஃப் வீரர்கள் விஜய் மக்கள் இயக்கத்தின் முன்னாள் மாவட்ட தலைவரான இன்பராஜை சால்வை அணுவிக்க விடாமல் தடுத்ததுடன் சிஆர்பிஎஃப் வீரர்கள் துப்பாக்கி காட்டி அவரை வெளியேற்றினர்.தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளை விஜயின் பாதுகாப்பு பணியில் இருக்கும் சிஆர்பிஎஃப் வீரர்கள் துப்பாக்கி முனையில் மிரட்ட விடுத்த சம்பவம் வைரலாகி வருகிறது.