அஜித்துக்கு ஸ்பெஷலான ஆண்டு
நடிகர் அஜித்குமார் இந்தாண்டு கார் ரேஸ், அடுத்தடுத்து திரைப்படங்கள், பதக்கங்கள் என பிஸியானதாகவும், ஸ்பெஷலான ஆண்டாகவும் அமைந்துள்ளது. விடாமுயற்சி சற்று சொதப்பினாலும், குட் பேட் அக்லியில் மாஸ் எண்டரி மூலம் மீண்டும் கம்பேக் கொடுத்துள்ளார். மேலும் திருமணம் ஆகி 25 ஆண்டுகள் நிறைவு செய்ததை தனது மனைவி ஷாலினியுடன் கேக் வெட்டி சமீபத்தில் கொண்டாடினார்.
இதுகுறித்தான வீடியோக்கள் இணையத்தில் வைரலானது. இதற்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்தனர். மனைவியின் ஆசையை நிறைவேற்றும் விதமாகவும், 25வது ஆண்டு திருமண நாளை கொண்டாடும் விதமாகவும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ஹைதராபாத் அணிகளிடையே நடந்த போட்டியை நடிகர் அஜித்குமார் தனது குடும்பத்தினருடன் கண்டு ரசித்தார்.
விருது பெற டெல்லி பயணம்
அஜித்தின் வருகையால் சேப்பாக்கம் மைதானமே சிறிது நேரம் ரசிகர்களின் விசில் சத்தத்தால் அதிர்ந்தது. இதைத்தொடர்ந்து நடிகர் அஜித் தனது குடும்பத்துடன் டெல்லி சென்றுள்ளார். கடந்த ஜனவரி மாதம் குடியரசு தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்பட்ட பத்ம விருதுகளில் அஜித்குமாருக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டது.
இது அவரது ரசிகர்கள் மட்டுமின்றி திரைத்துறைக்கே மகிழ்ச்சி தரும் செய்தியாக அமைந்தது. இந்த விருதை இன்று பெறவே நடிகர் அஜித்குமார் தனது குடும்பத்துடன் குடியரசு மாளிகைக்கு செல்கிறார். இன்று பத்ம பூஷன் விருதை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு கையால் நடிகர் அஜித் பெற உள்ளார். கார் ரேஸிங்கில் அடுத்தடுத்து பதக்கங்கள், திரைப்படங்கள் வெற்றி, 25வது ஆண்டு திருமண நாள்விழா, பத்ம பூஷன் விருது என சிறப்பான ஆண்டாக அமைந்துள்ளது. வரும் மே 1ம் தேதி தனது 54வது பிறந்தநாளை அஜித் கொண்டாட உள்ளார்.