தூத்துக்குடி செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”தென்தமிழக மக்களுக்கு மிகுந்த பயனளிக்கும் வகையில் 4300 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை இன்று பாரத பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.
பிரதமர் மோடிக்கு புகழாரம்:
கங்கைகொண்ட சோழபுரம் மூலம் கங்கைக்கும், தமிழகத்திற்கும் மிகப்பெரிய இணைப்பு இருந்தது என்பதை ராஜராஜசோழன் அன்றே உறுதிப்படுத்தி இருக்கிறார். அதை இன்று பாரத பிரதமர் நரேந்திர மோடி உறுதிப்படுத்துகிறார் என்று புகழாராம் தெரிவித்தார். இதுதான் நமது நாட்டின் ஆன்மா, வேற்றுமையில் ஒற்றுமை. ஆனால், தமிழகத்தில் பிரிவினைப் பேசி ஒற்றுமைக்கு மிகப் பெரிய பாதகம் ஏற்படும் அளவிற்கு பல குரல்கள் எழுகிறது” இது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று தெரிவித்தார்.
பெரியார் புராணம் பேச வேண்டியதில்லை:
”பெரிய புராணம் தான் அதிகப்படியாக பேச வேண்டும், பெரியார் புராணம் அல்ல.. ஏனென்றால் ஆயிரம் வருடங்களுக்கு முன்பே நீர் மேலாண்மை இருந்திருக்கிறது, விவசாயம் இருந்திருக்கிறது, நமது சோழ மன்னர்கள் ஆன்மீகத்தோடு தான் தமிழை வளர்த்தார்கள்” என்றார்.
அண்ணன் ஸ்டாலின் குணமடைய பிரார்த்தனை:
”அண்ணன் ஸ்டாலின் பூரண குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். அதோடு, தனியார் மருத்துவமனையில் அமர்ந்து கொண்டு உங்களுடன் ஸ்டாலின் என்ற பெயரில் வீடியோ காலில் பேசுவதை விட அரசு மருத்துவமனைக்கு ஏன் சிகிச்சைக்கு வரவில்லை? ஆஞ்சியோகிராம் சிகிச்சை இல்லையா? எனக்கு எந்த பாரபட்சமும் இல்லை. ஆனால், அரசு மருத்துவமனைக்கு வருபவர்களுக்கும், தனியார் மருத்துவமனைகளுக்கு வருபவர்களுக்கும் ஒரே மாதிரியான சிகிச்சை கிடைக்க வேண்டும் என்பதுதான் அரசாங்கத்தின் நோக்கமாக இருக்க வேண்டும்.
செந்தில் பாலாஜியின் தம்பி வெளிநாடு சென்று மருத்துவ சிகிச்சை பெறுகிறார். இங்கு இருக்கும் அரசியல்வாதிகள் வெளிநாடு செல்வார்கள் அப்படி இல்லை என்றால் தனியார் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுத்துக் கொள்வார்கள். ஆனால், பாரத பிரதமர் அரசு மருத்துவமனைக்கு சென்று தான் தடுப்பூசி எடுத்துக் கொண்டார்.
அவர் சிகிச்சை எடுப்பது பற்றியோ, மருத்துவமனை செல்வது பற்றியோ, நான் கருத்து கூற விரும்பவில்லை. ஆனால், இவர்கள் மக்களுடன் மக்களுக்காக நாங்கள் இருக்கிறோம் எனக் கூறுவதால் இதுப்பற்றி பேச வேண்டிய நிலை ஏற்படுகிறது” என்று கூறினார்.
எல்லா குற்றங்களிலும் திமுகவிற்கு பங்கு:
”மரியாதைக்குரிய சுகாதாரத்துறை அமைச்சர் அவர்கள் கிட்னி திருட்டு எல்லாம் நடக்கவில்லை இது ஒரு முறைகேடு எனக் கூறுகிறார். நமது வீட்டிற்கு திருடன் வந்து விட்டால் திருட்டு எல்லாம் நடக்கவில்லை ஏதோ முறைகேடாக எடுத்துச் சென்று விட்டான் என கூறுவோமா? இதை பூசி முழுகுவதன் மூலம் எவ்வளவு பிரச்சனை உள்ளது என்பதை உணர முடிகிறது. இதன் மூலம் ஏழை பாமர மக்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது தெரிகிறது.
அந்த மருத்துவமனைக்கு அறுவை சிகிச்சை லைசென்ஸ் ரத்து செய்து விட்டோம் என்கிறார்கள். இதில் திராவிட முன்னேற்ற கழகத்தைச் சார்ந்தவர்களுக்கு தொடர்புண்டு. பாலியல் தொல்லையாக இருந்தாலும் சரி, கொலை, கொள்ளையாக இருந்தாலும் சரி, கிட்னி திருட்டு இருந்தாலும் சரி, எல்லாவற்றிலும் திமுகவினருக்கு பங்கு இருக்கிறது என்பது மிக வேதனையான ஒன்று” என தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்தார்.