2025 ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் கடந்த மாதம் மார்ச் 22 ஆம் தேதி 10 அணிகளுடன் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் கோலாகலமாக தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்றையப்போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் மோதுகின்றன. நேற்று நடைபெற்ற 23-வது லீக் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இரவு 7.30 மணிக்கு நடைபெற்றது.
குஜராத் டைட்டன்ஸ்
இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனைத்தொடர்ந்து, முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் சாய் சுதர்சன் மற்றும் சுப்மன் கில் களமிறங்கினர். அதிரடியாக ஆடி 53 பந்தில் 82 ரன்கள் எடுத்து துஷார் தேஷ்பாண்டே பந்து வீச்சில் சஞ்சு சாம்சனிடம் கேட்ஸ் கொடுத்து அவுட்டானார். கேப்டன் சுப்மன்கில் 2 ரன்களில் ஜோஃப்ரா ஆர்ச்சர் பந்தில் ஆட்டமிழக்க, ஜோஸ் பட்லர் களமிறங்கினார். அவர் தன்பங்கிற்கு 25 பந்தில் 36 ரன்கள் சேர்ந்த நிலையில், எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். தமிழகத்தைசேர்ந்த ஷாருக்கான் 20 பந்தில் 36 ரன்கள் எடுத்தார். அடுத்தடுத்து வந்த ரூதர்போர்டு 7 ரன்னிலும், ராகுல் திவேட்டியா 24 ரன்னிலும், ரஷித் கான் 12 ரன்களும் எடுத்தனர். இறுதியில் குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்களை குவித்தது.
ராஜஸ்தான் ராயல்ஸ்
இதையடுத்து, 218 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்கியது. ஜெய்ஸ்வால் 6 ரன்னிலும், நிதிஷ் ரானா ஒரு ரன்னிலும் அவுட்டாகினர். 3-வது விக்கெட்டுக்கு சஞ்சு சாம்சனுடன் ரியான் பராக் இணைந்தார். ரியான் பராக் 14 பந்தில் 26 ரன்கள் எடுத்து அவுட்டானார். கேப்டன் சஞ்சு சாம்சன் நிதானமாக விளையாடிய நிலையில், 41 ரன்னில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து பொறுப்புடன் விளையாடிய ஹெட்மயர் அரைசதம் அடித்த நிலையில், 52 ரன்னில் வெளியேறினார். இறுதியில் ராஜஸ்தான் ராயல்ஸ் 19.2 ஓவரில் 159 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 58 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அபார வெற்றி பெற்றது.
புள்ளிப்பட்டியலில் முதலிடம்
நடப்பு தொடரில் இதுவரை நடைபெற்ற 5 போட்டிகளில், 1 போட்டியில் தோல்வியும், 4 போட்டிகளில் வெற்றியுடனும், 8 புள்ளிகளை பெற்று, 1.413 ரன்ரேட்டுடன் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.
ஐபிஎல் 2025
ராஜஸ்தானை வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அபார வெற்றி.. புள்ளிப்பட்டியலில் GT முதலிடம்!
ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடரில், நேற்று நடைபெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 58 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.