தமிழ்நாடு

ரயில் நிலையத்தில் ரூ.38 லட்சம் பறிமுதல்.. ரயில்வே போலீசார் விசாரணை

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் உரிய ஆவணம் இன்றி கொண்டுவரப்பட்ட 38 லட்சம் ரூபாய் பணம் ரயில்வே போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது.

ரயில் நிலையத்தில் ரூ.38 லட்சம் பறிமுதல்.. ரயில்வே போலீசார் விசாரணை
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ரூ.38 லட்சம் பறிமுதல்
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு ஆந்திர மாநிலத்திலிருந்து வருகை புரிந்த சர்க்கார் விரைவு ரயில் 7 வது நடைமேடைக்கு வந்துள்ளது. அப்பொழுது அங்கு எழும்பூர் ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளர் சபாஸ்டின் தலைமையிலான ரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் பயணிகளின் உடைமைகளை சோதனை செய்து கொண்டிருந்தனர்.

அப்பொழுது ஒரு நபர் சந்தேகத்திற்கு இடமாக சுற்றி திரிந்துள்ளார். அவரை பிடித்து விசாரணை செய்தபோது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார்.

இது சந்தேகம் அடைந்த ரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் அந்த நபரை அழைத்து விசாரணை மேற்கொண்டு அவர் வைத்திருந்த உடைமைகளை சோதித்த பொழுது அதில் உரிய ஆவணம் இன்றி ரூபாய் 38 லட்சம் ரூபாய் ஒரு பையில் செல்லோ டேப் சுத்தியவாறு மறைத்து கொண்டுவரப்பட்டது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து சென்னை எழும்பூர் ரயில்வே காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து அந்த நபரை ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் அந்த நபர் ஆந்திர மாநிலம் பாபட்ல மாவட்டம், சிர்லா நகர், சாந்தா பஜார் பகுதியை சேர்ந்த நரேஷ் (வயது 33) என்பதும் மேலும் அவர் சென்னை சவுகார்பேட்டையில் முறைகேடாக தங்கம் வாங்கிச் சென்று நகைகளை செய்து ஆந்திர மாநிலத்தில் விற்பனை செய்வதற்காக கொண்டு வரப்பட்ட பணம் என விசாரணை தெரிய வந்துள்ளது.

இதனை அடுத்து வருமானவரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு நரேஷ் என்பவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 38 லட்சம் ரூபாயை எழும்பூர் ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளர் சபாஸ்டின் தலைமையிலான பாதுகாப்பு படை வீரர்கள் ஒப்படைத்தனர்.