இந்தியா

14 நாள் தனிமைப்படுத்தப்பட்ட இந்திய விண்வெளி வீரர்.. நாசா கொடுத்த முக்கிய அப்டேட்..!

சர்வதேச விண்வெளி நிலையம் செல்லும் முதல் இந்திய வீரர் ஷுபான்ஷு சுக்லா, 14 நாள் தனிமைக்கு அனுப்பப்பட்டுள்ளார். விண்வெளி செல்லும் 3 வீரர்களையும், நாசா குழுவினர் உடல்நிலையை தகுதிப்படுத்தும் குவாரண்டைனுக்கு அனுப்பிவைத்து வாழ்த்து தெரிவித்தனர்.

 14 நாள் தனிமைப்படுத்தப்பட்ட இந்திய விண்வெளி வீரர்.. நாசா கொடுத்த முக்கிய அப்டேட்..!
14 நாள் தனிமைப்படுத்தப்பட்ட இந்திய விண்வெளி வீரர்.. நாசா கொடுத்த முக்கிய அப்டேட்..!
இந்திய விமானப்படையின் குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா, சர்வதேச விண்வெளி நிலையம் (ISS) செல்லும் முதல் இந்திய வீரராக வரலாற்று சாதனை படைத்துள்ளார். அமெரிக்காவின் நாசா மற்றும் இந்தியாவின் இஸ்ரோ இணைந்து நடத்தும் ஆக்சியம் ஸ்பேஸ் (Axiom Space) திட்டத்தின் கீழ், அவர்கள் வரும் மே 29 ஆம் தேதி சர்வதேச விண்வெளி மையத்திற்கு செல்ல உள்ளனர்.

Ax-4 (Axiom Mission-4) ஆக்சியம் மிஷன் திட்டத்தின் கீழ், சுபான்ஷு சுக்லா மற்றும் மற்ற 3 வீரர்கள்சர்வதேச விண்வெளி மையத்திற்கு பயணிக்கின்றனர். இந்த பயணம், அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலத்தில் ஏவப்படவுள்ளது. இந்த பயணம் 14 நாட்கள் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பயணத்தில், கமாண்டராக நாசாவின் முன்னாள் விண்வெளி வீரர் பெக்கி விட்சன் (Becky Whitson) பணியாற்றுகிறார். மேலும், போலந்தைச் சேர்ந்த ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி (Slawosz Usnanski) மற்றும் ஹங்கேரியைச் சேர்ந்த டிபோர் கபு (Dibor Kabu) ஆகியோர் சர்வதேச விண்வெளி மையத்திற்கு பயணிக்கின்றனர். இந்த பயணம், இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி முன்னேற்றத்தை உலகிற்கு அறியப்படுத்தும் மைல்கல்லாக அமையும்.

சுபான்ஷு சுக்லா, 1985 ஆம் ஆண்டு உத்தரப் பிரதேசத்தின் லக்னோவில் பிறந்தவர். 2006 ஆம் ஆண்டு இந்திய விமானப்படையில் சேர்ந்து, 2000 மணிநேரத்திற்கும் மேலான விமானப் பயிற்சியைப் பெற்றுள்ளார். 2019 ஆம் ஆண்டு, இஸ்ரோ அவரை ககன்யான் திட்டத்தின் கீழ் விண்வெளி பயிற்சிக்காக தேர்வு செய்தது. அவரது பயிற்சி, ரஷ்யாவின் ஸ்டார் சிட்டியில் உள்ள யூரி காகரின் விண்வெளி மையத்தில் நடைபெற்றது.

சுபான்ஷு சுக்லா மற்றும் அவரது குழுவினர், சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்று விஞ்ஞான ஆய்வுகளை மேற்கொள்வார்கள். இந்த ஆய்வுகள், மனித உடல்நிலை, வானிலை, மற்றும் விண்வெளி ஆராய்ச்சி தொடர்பான பல்வேறு துறைகளில் முக்கியமான தகவல்களை வழங்கும் என்று கூறப்படுகிறது.

நாசா மற்றும் ஆக்சியம் ஸ்பேஸ் குழுவினர், சுபான்ஷு சுக்லா மற்றும் அவரது குழுவினருக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். இந்த பயணம், இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சியில் புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வரலாற்றுச் சாதனையை கொண்டாடும் வகையில், இந்தியர்கள் பெருமை கொள்வதுடன், எதிர்காலத்தில் மேலும் பல விண்வெளி ஆராய்ச்சி முயற்சிகளுக்கு ஊக்கமளிக்கும் என நம்பப்படுகிறது.