தமிழ்நாடு

சென்னையில் அதிர்ச்சி.. வடமாநிலத்தவரை அடித்துக்கொன்ற மாற்றுத்திறனாளி!

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வடமாநிலத்தை சேர்ந்தவரை ஊன்றுகோலால் அடித்துக்கொன்ற மாற்றுத்திறனாளியை காவல்துறையினர் கைது செய்தனர்.

சென்னையில் அதிர்ச்சி.. வடமாநிலத்தவரை அடித்துக்கொன்ற மாற்றுத்திறனாளி!
சென்னையில் அதிர்ச்சி.. வடமாநிலத்தவரை அடித்துக்கொன்ற மாற்றுத்திறனாளி!
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில் கோச் ரெஸ்டாரண்டு அருகில் அடையாளம் தெரியாத 55 வயதுடைய ஒருவர் தலையில் காயத்துடன் கடந்த 21 ஆம் தேதி மயங்கி கிடப்பதாக பெரியமேடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அந்த நபரை சிகிச்சைக்காக ராஜீகாந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

ஆனால் நேற்று இரவு சிகிச்சைக்காக பலனின்றி அந்த நபர் உயிரிழந்தார். இதையடுத்து பெரியமேடு போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், இறந்து போனவர் சென்ட்ரல் ரயில் நிலைய பிளாட்பாரத்தில் தங்கி காகிதம், பிளாஸ்டிக், பாட்டில் பொறுக்கும் தொழில் செய்து வந்துள்ளார். இவருக்கும், ரயில் நிலையத்தில் பிச்சை எடுக்கும் திருண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான குமார் (42) என்பவருக்கும் கடந்த 21 ஆம் தேதி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

வாக்குவாதம் முற்றி கைகலப்பானதால் குமார் தான் ஊன்றி நடப்பதற்காக வைத்திருந்த பைப்பால் அந்த நபரை தலையில் தாக்கியதால் ரத்த காயத்துடன் மயங்கி விழுந்தது தெரிய வந்தது. இதையடுத்து குமாரை பெரியமேடு போலீசார் கைது செய்துள்ளனர்.

கொல்லப்பட்டவர் வடமாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதால், அவர் குறித்த விவரங்கள் எதுவும் போலீசாருக்கு தெரியவரவில்லை. பேப்பர் பொறுக்கும் போது பழக்கம் ஏற்பட்டது எனவும், தினமும் இரவு நேரங்களில் ஒன்றாக அமர்ந்து மது குடித்து அங்கேயே உறங்கி விடுவோம் எனவும் கைதான குமார் வாக்கு மூலம் அளித்துள்ளதாக தெரிகிறது.

கடந்த 21 ஆம் தேதி வட மாநில பெண்ணை குமார் வம்பிழுத்ததாகவும், இதனால் வட மாநில நபருக்கும், குமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு அது கொலையில் முடிந்ததாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. கைதான குமாரை பெரியமேடு போலீசார் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.