K U M U D A M   N E W S

இந்தி படித்தவர்கள் எல்லாம் தமிழ்நாட்டில் பானிப்பூரி விற்கிறார்கள் - ஏ.வ. வேலு பேச்சு

இந்தி படித்தவர்கள் எல்லாம் தமிழ்நாட்டில் வந்து கொத்தானார் வேலையும், பானிபூரியும் விற்கிறார்கள் என்று வாணியம்பாடியில் நடைப்பெற்ற திமுக பொதுக்கூட்டத்தில், பொதுப்பணித்துறை அமைச்சர், ஏ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

ரூ.10,000 கோடி கொடுத்தாலும்.. அந்த பாவத்தை ஒரு போதும் செய்ய மாட்டேன்

"ரூ.10,000 கோடி கொடுத்தாலும் திட்டத்தை ஏற்கமாட்டோம்" முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்

அரசியல் செய்வது நாங்கள் இல்லை - உதயநிதி

தமிழக மக்களின் வரிப்பணத்தை தான் மத்திய அரசிடம் கேட்கிறோம் - துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

பள்ளி, கல்லூரிகளின் சாதிப் பெயர்கள் நீக்கப்படுமா..? விளக்கமளிக்க அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு..!

பள்ளி, கல்லூரிகளின் பெயர்களில் இடம் பெற்றுள்ள சாதிப் பெயர்கள் நீக்கப்படுமா என்பது குறித்து விளக்கமளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

"தமிழக மக்களுக்கு பாதுகாப்பு இல்லை" - புதிய தமிழகம் நிறுவனர்

"புதிய கல்விக் கொள்கை குறித்து மத்திய அரசு விளக்க வேண்டும்" என்று புதிய தமிழக நிறுவனர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

இலங்கை கடற்படை அட்டூழியம் – மீண்டும் கைது செய்யப்பட்ட மீனவர்கள்

தமிழக மீனவர்கள் 10 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்

பரபரப்பான அரசியல் சூழலில் அமைச்சரவை கூட்டம் தேதி அறிவிப்பு

தமிழக அமைச்சரவை கூட்டம் வரும் 25ம் தேதி நடைபெறுவதாக அறிவிப்பு

தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வழக்கில் தமிழக அரசின் உடனடி நடவடிக்கைக்கு சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டு

தவெக பொதுக்குழுவுக்கு சிக்கல்...? மண்டை காயும் ஆனந்த்? எரிச்சலில் தவெக தொண்டர்கள்?

தமிழக வெற்றிக் கழக பொதுக்குழு பிப்ரவரி 26ம் தேதி நடைபெறும் என கூறப்பட்ட நிலையில், அதற்கு புதிய சிக்கல் ஒன்று உருவாகியுள்ளது. அந்த சிக்கல் என்ன? தவெகவினர் எரிச்சலில் இருப்பது ஏன்? பார்க்கலாம் இந்த தொகுப்பில்....

National Education Policy 2020 : "தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால் மட்டுமே நிதி" -மத்திய அமைச்சர்

National Education Policy 2020 : தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டால் மட்டுமே தமிழகத்திற்கு நிதி வழங்கப்படும் என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

தேதி குறித்த விஜய் ! ஸ்டார் ஹோட்டலில் மீட்டிங்

பிப்.26ம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் ஆண்டு விழா மற்றும் பொதுக்குழு கூட்டம்

விஜய்க்கு அச்சுறுத்தல்? உளவுதுறையின் ரிப்போர்ட்! துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு! XYZ பாதுகாப்பு என்றால் என்ன?

தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பை மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கியுள்ளது. இந்தியாவில் அரசியல் தலைவர்களுக்கும், பிரபலங்களுக்கும் வழங்கப்படும் X,Y,Y+,Zplus, SPG பாதுகாப்பு பிரிவுகளுக்கான அம்சங்கள் என்ன ? இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்...

தவெகவின் முதல் பொதுக்குழு? எங்கே? எப்போது? அதிரடி காட்டும் விஜய்..!

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் விரைவில் கூட உள்ளதாகவும், அதற்கான இடம் மற்றும் தேதியை தவெக தலைவர் விஜய் குறித்துவிட்டதாகவும் வெளியாகி இருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தவெக முதல் பொதுக்குழு எப்போது, எங்கே நடக்கிறது? விரிவாக பார்ப்போம் இந்த செய்தி தொகுப்பில்.

நாசவேலைக்கு சதித்திட்டம்? சென்னையில் பிடிபட்ட அசாம் தீவிரவாதி

அபுசலாம் அலி சென்னையில் வேறு யாருடனாவது தொடர்பில் இருந்தாரா என தமிழக கியூ பிரிவு போலீசார் விசாரணை

திருச்செந்தூர் கோயில் விவகாரம் – ”கடமையை சரியா செய்யுங்க” – நீதிமன்றம் சொன்ன அட்வைஸ்

கோயில் சொத்துகளை பாதுகாக்க ஊதியம் பெறும் அரசு அலுவலர்கள் முறையாக கடமையை செய்வதில்லை.. திருச்செந்தூர் கோயிலுக்கு அறநிலையத்துறை செலுத்த வேண்டிய  வாடகை பாக்கி தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கருத்து

இந்தியாவிலேயே தமிழக காவல்துறை தான்  சிறப்பாக செயல்படுகிறது - டிஜிபி சங்கர் ஜிவால்

போதைப் பொருளை தடுக்கும் பணியில் இந்தியாவிலேயே தமிழக காவல்துறை தான்  சிறப்பாக செயல்படுகிறது என்று டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். 

தனியாருக்கு பாதுகாப்பு வழங்கும் நடைமுறையை தவிர்க்க வேண்டும் - தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

பொதுமக்கள் வரிப் பணத்தில் ஊதியம் பெறும் காவல்துறையினர் பொது மக்களுக்கு தான் சேவை செய்ய வேண்டுமே தவிர, தனியாருக்கு பாதுகாப்பு வழங்க பயன்படுத்தக் கூடாது என அறிவுறுத்திய சென்னை உயர் நீதிமன்றம், காவல்துறையினரை தனியாருக்கு பாதுகாப்பு வழங்க பயன்படுத்தும் நடைமுறையை தவிர்க்க வேண்டும் என்று தமிழக அரசுக்கும், டி.ஜி.பி.க்கும் உத்தரவிட்டுள்ளது

விஜய்-பிரசாந்த் கிஷோர் சந்திப்பு.. கூட்டணியா? தனித்தா?.. என்ன செய்ய போகிறது தவெக?

வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு 8 முதல் 10 சதவீத வாக்குகள் வரை கிடைக்கக் கூடும் என தேர்தல் வியூக பொறுப்பாளர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்கள் இழப்பீடு கிடைக்காவிட்டால் மனு அளிக்கலாம் - சென்னை உயர்நீதிமன்றம் அறிவிப்பு

கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்கள் இழப்பீடு கிடைத்திருக்காவிட்டால், அரசிடம் மனு அளித்தால் பரிசீலிக்கப்படும் என தமிழக அரசுத்தரப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

ஆளுநருக்கு எதிரான வழக்கு – உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கோரிக்கை

அமைச்சரவை முடிவுபடி தான் ஆளுநர் செயல்பட முடியும் என்றுதான் அவருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது - அரசு

படகோட்டிக்கு ரூ.2 கோடி அபராதம்

தமிழக மீனவர்கள் 14 பேருக்கு தலா ரூ.50,000 விதித்தது இலங்கை நீதிமன்றம்

வாக்காளர்களை நீக்கியதே ஆம் ஆத்மி கட்சியின் தோல்விக்கு காரணம் - தமிழக ஒருங்கிணைப்பாளர் வசீகரன் கருத்து

டெல்லியில் சட்டப்பேரவை தொகுதிகளில் வாக்களார்களை நீக்கியதே ஆம் ஆத்மி  கட்சியின் தோல்விக்கு காரணம் என்று தமிழக ஒருங்கிணைப்பாளர் வசீகரன் குமுதம் செய்திகளுக்கு பிரத்யேகமாக பேட்டியளித்துள்ளார்.

தமிழ் மிகவும் பழமையான தொன்மையான மொழி - ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாராம்

தமிழ் மிகவும் பழமையான தொன்மையான மொழி அதனை அனைவரும் கற்று தெரிந்து கொள்ள வேண்டும்  பழங்குடியினரின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதற்கு மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாக ஆளுநர் பேசியுள்ளார். 

ஈரம் கூட காயாத தாலி..! மணமகன் மர்ம மரணம்..!

கட்டிய தாலியின் ஈரம் கூட காயாத நிலையில், நண்பர்களைப் பார்க்க செல்வதாக கூறிவிட்டு சென்ற புது மாப்பிள்ளை மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மரபணு குறைபாடு: குழந்தைக்காக ஒன்றிணைந்த தல – தளபதி ரசிகர்கள்…!

மரபணு குறைபாடு நோயால் பாதிக்கப்பட்டுள்ள திருவாரூரைச் சேர்ந்த 6 மாத பெண் குழந்தையின் சிகிச்சைக்காக அஜித் ரசிகர்கள் மற்றும் தவெக நிர்வாகிகள் இணைந்து நிதி திரட்டி வருகின்றனர். இந்த நிலையில், தங்கள் மகளை காப்பாற்றத் துடிக்கும் பெற்றோரின் அவலநிலை, பார்ப்போரை கண்கலங்க வைக்கிறது.