தொண்டர்களுக்கு பிரச்னை என்றால் வந்து நிற்பேன்
திண்டுக்கல்லில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியதாவது, “இரட்டை இலை, தாமரை உறுதியான இறுதியான கூட்டணி. யார் யாருக்கு எவ்வளவு பங்கெடுப்பு என்பது எனக்கும் தேவையில்லை. நமக்கும் தேவையில்லை.இது குறித்து இணையதளத்தில் பகிர்வதால் இந்த பிரச்சனையும் வந்து விடக்கூடாது.
ஆட்சியிலிருந்து திமுகவை அப்புறப்படுத்த வேண்டியது நமது வேலை அதுதான் முக்கியம். கூட்டணி குறித்து இபிஎஸ் மற்றும் அமித்ஷா பார்த்துக் கொள்வார்கள். தேசிய ஜனநாயக கூட்டணியில் யார், யார் உள்ளனர் என்பதை அவர்கள் முடிவு செய்வார்கள்.
போலீஸ் தொந்தரவு செய்தால் உங்களை பாதுகாக்க வேண்டியது தான் எனது அதிகாரம். பாஜக தொண்டர்களுக்கு பிரச்சனை என்றால் அந்த இடத்தில் நயினார் நாகேந்திரன் வந்து நிற்க வேண்டும். இணையதளத்தில் தொண்டர்கள் நாகரிகமாக நடந்து கொள்ள வேண்டும். நமது கட்சி ஒழுக்கமான, கட்டுப்பாடான தேசிய நலன் சார்ந்த, தேசபக்தி நிறைந்த கட்சி. நமது கட்சியில் ஒரு பதிவு போட்டால் அது நியாயமாக இருக்கும் என அனைவரும் மதிக்க வேண்டும்.
தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வரும்
நான் சிங்கமோ, புலியோ, கரடியோ இல்லை தலைமை பொறுப்பில் இருக்கும் சாதாரண தொண்டன். நமக்கு இருக்கும் ஒரே தலைவர் மோடி மட்டுமே. வாழ்க என்ற வார்த்தை மோடிக்கு, அமித்ஷா மட்டுமே சொல்ல வேண்டும்.இந்த முறை சட்டமன்றம் செல்லும் பொழுது அதிகப்படியான பாஜக எம்.எல்.ஏ.க்கள் செல்வார்கள்.தேசிய ஜனநாயக ஆட்சி இபிஎஸ் தலைமையில் நடைபெறும்.இந்தியா ஆன்மீக நாடு. இங்கு வேதங்கள் முழங்க வேண்டும். நாட்டில் மழை மற்றும் செழிப்பாக இருக்க வேண்டும் என்றால் வேதங்கள் முழங்க வேண்டும். எச்.ராஜா பாணியில் நான் கருத்துக்கள் சொல்ல முடியாது. தமிழக முதலமைச்சர் மற்றும் தமிழ்நாடு அரசு மத்திய அரசு கண்ட்ரோலில் இருந்து அவுட் ஆப் கண்ட்ரோலில் சென்றுள்ளது என கூறியுள்ளார்.
நமது உழைப்பில் 2026ல் திமுக அவுட் ஆப் கண்ட்ரோலில் தமிழ்நாட்டை விட்டு போக வேண்டும் என்ற எண்ணமும், செயலாகவும் இருக்கும்.தமிழக முதலமைச்சர் எந்த ஷா வந்தாலும் இங்கு ஒன்றும் செய்ய முடியாது என கூறியுள்ளார். ஷா சென்ற ஹரியானா, மகாராஷ்டிரா, டெல்லி பாஜக ஆட்சி அமைத்தது. இனி அடிக்கடி தமிழ்நாட்டிற்கு வருவார். தமிழ்நாட்டிலும் பாஜக ஆட்சிக்கு வரும் அது அவருடைய பொறுப்பு.திருநெல்வேலி என்றால் அல்வா, வேறு எதுவும் நினைக்காதீர்கள். மணப்பாறை முறுக்கு, மைசூர் பாகு, திண்டுக்கல் பூட்டு, 2026 அனைவரும் ஒன்று சேர்ந்து இந்த ஆட்சிக்கு போட வேண்டும் பூட்டு” என தெரிவித்தார்.