சினிமா

ஓடும் ரயிலில் முத்தம் கேட்ட மர்ம நபர்.. சர்ச்சையை கிளப்பிய மாளவிகா மோகனன்

மும்பை லோக்கல் ரயிலில் தனக்கு ஏற்பட்ட அதிர்ச்சியூட்டும் சம்பவத்தை நடிகை மாளவிகா மோகனன் பகிர்ந்துள்ளார்.

ஓடும் ரயிலில் முத்தம் கேட்ட மர்ம நபர்.. சர்ச்சையை கிளப்பிய மாளவிகா மோகனன்
ஓடும் ரயிலில் முத்தம் கேட்ட மர்ம நபர்.. சர்ச்சையை கிளப்பிய மாளவிகா மோகனன்
கடந்த 2013-ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ‘பட்டம் போலே’ திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் மாளவிகா மோகனன். தொடர்ந்து, தமிழில் ‘பேட்ட’, ‘மாஸ்டர்’, ‘தங்கலான்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவர் பாலிவுட் படத்திலும் நடித்துள்ளார். விரைவில் பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் ‘தி ராஜா சாப்’ படத்தின் மூலம் தெலுங்கிலும் அறிமுகமாக உள்ளார்.

நடிகை மாளவிகா மோகனன் தற்போது பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘சர்தார் 2’ திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்நிலையில், மும்பையில் கல்லூரியில் படிக்கும் போது தான் சந்தித்த அதிர்ச்சியூட்டும் சம்பவத்தை நடிகை மாளவிகா மோகனன் பகிர்ந்துள்ளார்.

முத்தம் கேட்ட நபர்

அவர் பேசியதாவது, “மும்பை, பெண்களுக்கு பாதுகாப்பான இடம் என்று பலர் கூறுகின்றனர். அதை நான் திருத்த விரும்புகிறேன். என்னிடம் தனியாக கார் இருக்கிறது. அதற்கு ஓட்டுநர் இருக்கிறார். அதனால் யாராவது வந்து மும்பை இப்போது பாதுகாப்பான நகரமா எனக் கேட்டால், அதற்கு இப்போதைக்குப் பாதுகாப்பான நகரம் என்றுதான் கூறுவேன். ஆனால், நான் கல்லூரியில் படிக்கும்போது இந்த பாதுகாப்பை உணரவில்லை.

ஒரு முறை மும்பை லோக்கல் ரயிலில் நானும் எனது நண்பர்கள் இருவரும் சென்று கொண்டிருந்தோம். அப்போது முதல் வகுப்பு பெட்டியில் ஜன்னல் அருகே அமந்திருந்தோம். எங்களை தவிர அந்த பெட்டியில் யாரும் இல்லை. அந்த நேரத்தில் ஒருவர் ஜன்னல் கம்பி அருகே வந்து எனக்கு ஒரு முத்தம் தருவாயா? என்று கேட்டார். அதை கேட்டதும் நாங்கள் அப்படியே உறைந்துவிட்டோம்.

அந்த நேரத்தில் அவர் உள்ளே நுழைந்தால் என்ன செய்து என்று கூட தெரியாத வயது அது. ஒவ்வொரு பெண்ணுக்கும் இதுபோன்ற கதைகள் இருக்கும் . எந்த இடமும் முழுமையாக பாதுகாப்பாக இருக்காது” என்று கூறினார்.