இந்தியா

அமெரிக்க துணை அதிபர் நாளை இந்தியா வருகை...வடமாநிலங்களில் சுற்றுப்பயணம் செய்ய திட்டம்

அமெரிக்க துணை அதிபர் வான்ஸின் மனைவி உஷா சிலுகுரி ஆந்திரப் பிரதேசத்தை பூர்வீகமாகக் கொண்டவர்.

 அமெரிக்க துணை அதிபர் நாளை இந்தியா வருகை...வடமாநிலங்களில் சுற்றுப்பயணம் செய்ய திட்டம்
பிரதமர் மோடியுடன் அமெரிக்க துணை அதிபர் வான்ஸ் தனது குடும்பத்தினருடன்...
அமெரிக்க துணை அதிபர் வருகை

அமெரிக்க துணை அதிபர் ஜெ.டி.வான்ஸ் தனது குடும்பத்துடன் நாளை (ஏப்.21) முதல் 24ம் தேதி வரை இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.அந்த சுற்றுப்பயணத்தின் போது பிரதமர் மோடியுடன் பொருளாதாரம், வர்த்தகம் உள்ளிட்டவை குறித்து வான்ஸ் விவாதிப்பார் என கூறப்படுகிறது.

நாளை டெல்லி வந்தடையும் வான்ஸ், இந்தியாவின் கலாசார பெருமைமிக்க இடங்களுக்கு தனது குடும்பத்தினருடன் சென்று பார்வையிடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயணத்தின்போது தென்மாநிலங்களுக்கு வான்ஸ் வரப்போவதில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவின் மருமகன்

அமெரிக்க துணை அதிபர் வான்ஸின் மனைவி உஷா சிலுகுரி ஆந்திரப் பிரதேசத்தை பூர்வீகமாகக் கொண்டவர். உஷாவின் பெற்றோர் 1970ம் ஆண்டு தொடக்கத்திலேயே இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு குடிப்பெயர்ந்துவிட்டனர். உஷாவின் தாத்தா ராம சாஸ்திரி சென்னை ஐஐடியில் பேராசிரியராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.