நடிகர் சூர்யாவின் 44-வது திரைப்படமான ‘ரெட்ரோ’ படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ளார். இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும், நாசர், பிரகாஷ் ராஜ், ஜோஜூ ஜார்ஜ், ஜெயராம், கருணாகரன் ஆகியோர் நடித்துள்ளனர்.
சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்தை 2டி எண்டர்டெயின்மெண்ட் மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. 'ரெட்ரோ’ திரைப்படம் மே 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் சமீபத்தில் இப்படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. காதல், அதிரடி ஆக்ஷன் கலந்த இந்த டிரைலரை ரசிகர்கள் இணையத்தி வைரலாக்கினர்.
இந்நிலையில், நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா, அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள காமாக்யா கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளனர். இதுதொடர்பான புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள நடிகை ஜோதிகா தனது அடுத்த படத்தை தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.