சினிமா

டப்பா ரோலை விட ஆன்டி கதாபாத்திரமே மேல்.. சக நடிகையின் கிண்டலுக்கு சிம்ரன் பதில்!

ஆன்டி ரோலில் நடிப்பதற்கு இதுவே மேல் என்று சக நடிகை கிண்டல் செய்ததற்கு சிம்ரன் பதிலளித்தது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

டப்பா ரோலை விட ஆன்டி கதாபாத்திரமே மேல்.. சக நடிகையின் கிண்டலுக்கு சிம்ரன் பதில்!
டப்பா ரோலை விட ஆன்டி கதாபாத்திரமே மேல்.. சக நடிகையின் கிண்டலுக்கு சிம்ரன் பதில்
90-களில் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை சிம்ரன். பலரின் கனவு கன்னியாகவும் இருந்துள்ளார். விஜய், அஜித் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். பாலச்சந்தர் இயக்கிய பார்த்தாலே பரவசம், மணிரத்னம் இயக்கிய கன்னத்தில் முத்தமிட்டால், ராக்கெட்ரி ஆகிய படங்களில் மாதவனுடன் இணைந்து நடித்துள்ளார்.

நடிகை சிம்ரன் திருமணத்திற்கு பிறகு திரையுலகில் இருந்து சற்று விலகி இருந்தார். தற்போது மீண்டும் திரைப்படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். நல்ல துணைக் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளியான ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சிம்ரன் நடித்திருந்தார்.

சக நடிகைக்கு பதிலளித்த சிம்ரன்

இந்நிலையில், சக நடிகை ஒருவர் தன்னை பற்றி பேசியது குறித்து நடிகை சிம்ரன் தனியார் விருது நிகழ்ச்சியில் ஆதங்கமாக பேசியுள்ளார். அதில், “அண்மையில் சக நடிகை ஒருவருக்கு குறுஞ்செய்தி அனுப்பியிருந்தேன். உங்களை இந்த கதாபாத்திரத்தில் பார்ப்பது ஆச்சர்யமாக இருந்தது என்றேன். அதற்கு அவர் வயது மூப்பு கதாபாத்திரங்களை ஏற்று நடிப்பதற்கு இதுவே மேல் என்று பதிலளித்தார்.

இது முற்றிலுமான பொறுப்பற்ற பதில். இந்த பதிலை நான் எதிர்பார்க்கவில்லை. ‘டப்பா’ கதாபாத்திரங்களை ஏற்று நடித்து ஒன்றும் செய்யாமல் இருப்பதை விட முக்கியத்துவம் வாய்ந்த வயது மூப்பு கதாபாத்திரங்களில் நடிக்கலாம். நாம் எதை செய்ய விரும்புகிறோமோ அதில் நமக்கு நம்பிக்கை இருக்க வேண்டும்” என்று கூறினார்.

சிம்ரனை மோசமாக பேசிய அந்த நடிகை ஜோதிகா என்று பலர் இணையத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர். அதாவது, ஜோதிகா ’டப்பா கார்டெல்’ (Dabba Cartel) என்ற வெப்தொடரில் நடித்துள்ளார். நடிகை சிம்ரன் தனது பேச்சில் ‘டப்பா’ என்று குறிப்பிட்டிருப்பதால் ஜோதிகா தான் அதை சொல்லியிருப்பார் என்று பலர் கூறி வருகின்றனர். மேலும், சிலர் அந்த நடிகை லைலாவாக இருக்கலாம் என்றும் பதிவிட்டு வருகின்றனர்.