ஐபிஎல் 2025

MI vs CSK...பந்து வீச்சை தேர்வு செய்தது மும்பை அணி

சிஎஸ்கேவுக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

MI vs CSK...பந்து வீச்சை தேர்வு செய்தது மும்பை அணி
மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன
மும்பை இந்தியன்ஸ்-சிஎஸ்கே

38வது ஐபிஎல் லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி தனது சொந்த மண்ணில் சென்னை சூப்பர் அணியை எதிர்கொள்கிறது. வான்கடே திடலில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து, முதலில் பேட்டிங் செய்ய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் களம் இறங்கியுள்ளனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடும் வீரர்கள்: ஷேக் ரஷீத், ரச்சின் ரவீந்திரா, ஆயுஸ் மத்ரே, ரவீந்தர ஜடேஜா, ஷிவம் துபே, விஜய் சங்கர், ஜேமி ஓவர்டன், எம்.எஸ்.தோனி, நூர் அகமது, கலீல் அகமது, மதீஷா பத்திரனா.

மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடும் வீரர்கள்: ரியான் ரிக்கல்டன், வில் ஜாக்ஸ், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, நமன் திர், மிட்செல் சான்ட்னர், தீபக் சாஹர், டிரென்ட் போல்ட், ஜஸ்ப்ரீத் பும்ரா, அஸ்வினி குமார்.