தமிழ்நாடு

சென்னையில் மனைவி கண்முன்னே பிரபல ரவுடி வெட்டிக்கொலை...முன்விரோதத்தால் நடந்த கொடூரம்

வியாசர்பாடியில் பிரபல ரவுடி வெட்டிப்படுகொலை செய்யப்பட்டு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

சென்னையில் மனைவி கண்முன்னே பிரபல ரவுடி வெட்டிக்கொலை...முன்விரோதத்தால் நடந்த கொடூரம்
மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட ரவுடி தொண்டை ராஜ்
ரவுடி வெட்டிக்கொலை

சென்னை வியாசர்பாடி உதயசூரியன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ் என்கின்ற தொண்டை ராஜ்.இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் பிள்ளைகள் உள்ளனர். இவர் மீது மூன்று கொலை வழக்கு உட்பட பதினைந்துக்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் உள்ளன.

இவர் இன்று வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர் மெயின் ரோடு வழியாக தனது மனைவியுடன் செல்லும்போது இவரை வழிமறித்த இரண்டு பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டியது.இதில் முகத்தில் பலத்த காயமடைந்த தொண்டை ராஜ் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.

முன்விரோதத்தில் கொலை

இது குறித்து அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வியாசர்பாடி போலீசார் தொண்டைராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடைபெற்றுள்ளது தெரியவந்துள்ளது.