K U M U D A M   N E W S

2 மசோதாக்களுக்கு தமிழக ஆளுநர் ஓப்புதல்

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 2 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று ஒப்புதல் அளித்துள்ளார்.

பரந்தூர் மக்களே நம்பிக்கையோடு இருங்கள்...தவெக தலைவர் விஜய்

என் பாசத்துக்குரிய பரந்தூர் மக்களே, நம்பிக்கையோடு இருங்கள், நாளை நமதே என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

தவெக வெளியிட்ட அறிக்கை.. பூத் கமிட்டி கருத்தரங்கில் தலைவர் விஜய் பங்கேற்பு!

கோவையில் வரும் ஏப்ரல் 26,27 ஆம் தேதி தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பில் நடைபெறும் பூத் கமிட்டி கூட்டத்தில், அக்கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்ற உள்ளதாக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

’இரட்டை இலக்கு தாங்க..இல்லாக்காட்டி போங்க...’ - சீட்டுக்கு செட்டிங்..? காத்திருக்கும் காம்ரேட்கள்..! தலைவலியில் தலைமை?

தமிழக அரசியல் களத்தில் ’ஆட்சி, அதிகாரத்தில் பங்கு’ என கொளுத்திப்போடப்பட்ட திரி அறிவாலயத்தில் புகையத் தொடங்கியிருப்பதாக கூறப்படுகிறது. இதனால், விசிக, காங்கிரஸை தொடர்ந்து காம்ரேட்களும் பல டிமாண்டுகளை திமுக தலைமையிடம் வைப்பதாக கூறப்படுகிறது. அந்த டிமாண்ட் என்ன? திமுக எடுக்கப்போகும் முடிவு என்ன? பார்க்கலாம் இந்த தொகுப்பில்...

தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வரும்...நயினார் நாகேந்திரன் பேச்சு

அமித்ஷா சென்ற ஹரியானா, மகாராஷ்டிரா, டெல்லி பாஜக ஆட்சி அமைத்தது. இனி அடிக்கடி தமிழ்நாட்டிற்கு வருவார், தமிழ்நாட்டிலும் பாஜக ஆட்சிக்கு வரும்.அது அவருடைய பொறுப்பு என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

கர்நாடகா அரசு மேகதாது அணையை கட்ட முடியாது- அமைச்சர் துரைமுருகன்

தமிழகத்தின் ஒத்துழைப்பு இல்லாமல் கர்நாடகா அரசு மேகதாது அணையை கட்ட முடியாது என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

என்னோட ஃபோன்ல இருந்து எல்லாத்தையும் வாட்ச் பண்ணிட்டு இருக்காங்க.. நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

இனியொருமுறை தி.மு.க ஆட்சிக்கு வந்தால் சனாதான தர்மத்தை நாம் காப்பாற்ற முடியாது

நயினார் நாகேந்திரனை முற்றுகையிட்ட பெண்கள்...பாஜக நிர்வாகிகள் அதிர்ச்சி

கருமத்தம்பட்டியில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனை விசைத்தறியாளர்களின் குடும்பத்தை சேர்ந்த பெண்கள் சிலர் கேள்விகளால் துளைத்து எடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

“செர்பியாவில் சரியாக உணவு கிடைக்கவில்லை”- போட்டியில் பதங்கம் வென்று நாடு திரும்பிய வீரர்கள் ஆதங்கம்

பள்ளிகளுக்கு இடையிலான ஒலிம்பிக் போட்டி என்று அழைக்கப்படும் ஐஎஸ்எப் வேர்ல்ட் ஸ்கூல் கேம்ஸ் போட்டியில் வாக்குவாண்டா தற்காப்பு கலையில் மொத்தம் 6 வெள்ளி பதக்கம் வென்று தமிழக மாணவ, மாணவிகள் அசத்தல்

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்...ஜிபிஎஸ் கருவி உள்ளிட்டவற்றை அபகரித்து அட்டூழியம்

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கத்தியால் தாக்கியதில் மீனவர் ஒருவர் காயம் அடைந்துள்ளார்.

தர்பூசணி பழத்தில் ரசாயனம் இல்லை - உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தர்பூசணி பழங்களை ஆய்வு செய்ததில் எந்த ரசாயனமும் செலுத்தப்படவில்லை என கண்டறியப்பட்டுள்ளதாக, தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

டாஸ்மாக் முறைகேடு வழக்கு.. முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்ய ED-க்கு நீதிமன்றம் உத்தரவு!

டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக தமிழக காவல்துறை மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த முதல் தகவல் அறிக்கைகளை தாக்கல் செய்ய அமலாக்கத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

5 நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று மீண்டும் கூடுகிறது சட்டப்பேரவை

அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், கயல்விழி செல்வராஜ் ஆகியோர் பதிலளித்து புதிய அறிவிப்புகளை வெளியிட உள்ளனர்.

ஸ்டாலினுக்கு எதிரான வேட்பாளர்.. பாஜகவின் பக்கா ஸ்கெட்ச்? இதுதான் சரியான போட்டி!

தமிழக பாஜகவின் புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில், பதவி பறிக்கப்பட்டாலும் அண்ணாமலையை வைத்து அதிரடி காட்ட டெல்லி பாஜக ஒரு திட்டம் தீட்டியிருப்பதாக கூறப்படுகிறது. அத்திட்டம் என்ன? பார்க்கலாம் இந்த தொகுப்பில்..

மசோதாக்கள் மீதான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு.. அரசின் சரியான நடவடிக்கைக்கு சான்று!

மசோதாக்கள் மீதான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு என்பது, தமிழக அரசு சரியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்பதை உறுதிபடுத்துவதற்கான சான்று என்று அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.

தமிழக ஆளுநர் விவகாரம்: எனக்கு காது கேட்க மாட்டேங்குது - நாகலாந்து ஆளுநர் பதில்

தமிழக ஆளுநர் விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்த எழுப்பப்பட்ட கேள்விக்கு நாகலாந்து ஆளுநர் இல.கணேசன் எனக்கு இந்தக் காது வேலை செய்ய மாட்டேங்குது மிஷின் வைக்க வேண்டும் என்று கூறினார்.

வெப்பத்தால் பாதிக்கப்படுபவர்களுக்கு உதவிகள்....அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் அறிவிப்பு

வெப்பத்தை எதிர்கொள்ள போதுமான வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமசந்திரன் தெரிவித்தார்.

6 மாதத்திற்குள் பாதுகாப்பான குடிநீர் வழங்கப்படும்...சட்டப்பேரவையில் கே.என்.நேரு உறுதி

இன்னும் 6 மாதத்திற்குள் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு முழுவதுமாக பாதுகாப்பான குடிநீர் வழங்கப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு பதில் அளித்தார்.

ஞானசேகரன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரங்கள் உள்ளதால் வழக்கில் விடுவிக்கக்கூடாது - தமிழக அரசு

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில், ஞானசேகரன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரங்கள் உள்ளதால் வழக்கில் இருந்து விடுவிக்கக்கூடாது என தமிழக அரசு போக்சோ நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

கவுன்சிலர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்ட வழக்கு.. தமிழக அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

பதவி நீக்கம் செய்யப்பட்ட சென்னை மாநகராட்சி கவுன்சிலர்கள், உசிலம்பட்டி நகராட்சி தலைவர் ஆகியோர் தாக்கல் செய்த வழக்கில், ஏப்ரல் 21 ஆம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உதகை மக்களை பார்த்து பொறாமை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

இளைஞர்களின் வேலை வாய்ப்பிற்காக நீலகிரியில் மினி டைடல் பார்க் வர உள்ளது.

வனப்பகுதியில் அன்னிய மரங்களை அகற்ற நவீன இயந்திரங்கள் - தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு

தமிழக வனப்பகுதிகளில் அன்னிய மரங்களை அகற்ற நவீன இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருவதற்கு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது.

டிஜிபி சீமா அகர்வால் உள்ளிட்ட 7 ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் - தமிழக அரசு உத்தரவு

சென்னை போக்குவரத்துக் கூடுதல் ஆணையர், பொருளாதார குற்றப்பிரிவு, லஞ்ச ஒழிப்புத்துறை இணை இயக்குனர் உள்ளிட்ட 7 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தீப்பெட்டி தொழில் தோன்றியது சிவகாசியா? ஜப்பானா? சட்டப்பேரவையில் சுவாரஸ்யமிக்க விவாதம்

தீப்பெட்டி தொழில், ஜப்பானில் தோன்றியதா? சிவகாசியில் தோன்றியதா? என்பது குறித்து சட்டப்பேரவையில் விவாதம் ஏற்பட்டது.

சவுக்கு சங்கர் புகார் – விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றம்

யூடியூபர் சவுக்கு சங்கர், தனது பேட்டியில், சென்னை பெருநகர காவல்துறையினரையும், காவல் ஆணையரையும் குறித்து சில குற்றச்சாட்டுகளை முன்வைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.