விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் புதிய தமிழகம் கட்சியின் சார்பில் அக்கட்சியின் நிறுவனத்தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தலைமையில் சாத்தூர் வட்டம் இருக்கண்குடி மாரியம்மன் கோவில் உள்ள பகுதி அரசுப்பதிவேட்டில் வேறு ஒரு கிராம எல்லையில் இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அரசுப்பதிவேட்டில் திருத்தம் செய்து கோவில் இருக்கும் பகுதியை இருக்கண்குடி எல்லையில் சேர்க்க மாவட்ட நிர்வாகத்தையும், தமிழக அரசையும் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் கிருஷ்ணசாமி, “1995 போட்ட மாவட்ட ஆட்சியரின் உத்தரவை ரத்து செய்து, நீதிமன்ற உத்தரவுப்படி நிலத்தை மறுவரையறை செய்து இருக்கண்குடி ஊராட்சி எல்லைக்குள் மாரியம்மன் கோவில் இருக்கும்படி சர்வேயை சேர்க்க வேண்டும் என்றார்.
மேலும், கோரிக்கை நிறைவேறாவிட்டால் ஒருமாத காலம் அவகாசம் எடுத்து அனைத்து சமுதாய மக்களையும் ஒன்றுதிரட்டி மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்றும் ஆட்சியாளர்களான திமுகவினர் எந்த கோவிலும் இருக்கக்கூடாது என நினைக்கிறார்கள் என்றும் குற்றம்சாட்டினார்.
இந்து மத நம்பிக்கையை தகர்க்க திமுக தீர்மானம்
தொடர்ந்து பேசிய அவர், இந்து மதம், இந்து பக்தியோடு இருக்கக்கூடாது என்ற எண்ணத்தில் திமுக இருப்பதாகவும், இருக்கண்குடி மாரியம்மன் கோவிலை அபகரித்து அந்த கோவிலுக்கு யாரும் வரக்கூடாது என்ற எண்ணம் அவர்கள் மனதிற்குள் இருப்பதாகவும், இந்த கோவிலுக்கு பக்தர்கள் வரவேண்டும் என்றும் நினைப்பதாக கூறினார்.
மேலும், இந்த கோவிலை வைத்து இரண்டு பேருக்குள் சண்டையை ஏற்படுத்திவிட்டால், கோவிலுக்குள் யாரும் வரமாட்டார்கள் என்றும் மொத்தத்தில் இந்து மத நம்பிக்கைகளை தகர்க்க வேண்டும் என்ற தீர்மானத்தில் திமுக அரசு உள்ளது கடுமையாக சாடினார்.