முற்றுகையிட்ட பெண்கள்
தமிழ்நாட்டில் கடந்த 30 நாட்களுக்கும் மேலாக விசைத்தறியாளர்கள், ஜவுளி உற்பத்தியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, ஒப்பந்தக் கூலி உயர்வு வழங்கக் கோரி காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று போராட்டக்களத்திற்கு வந்திருந்தார்.
அப்போது, போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விசைத்தறியாளர்களின் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள், நயினார் நாகேந்திரனை முற்றுகையிட்டு கேள்விகளால் துளைத்து எடுத்தனர். "அனைத்து கட்சியினரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதாக வந்து செல்கின்றனர்.ஆனால், இதுவரை எந்தவித முன்னெடுப்புகளும் எடுக்கப்படவில்லை.
பாஜகவினர் அதிர்ச்சி
எங்களுக்கு வெறும் ஆதரவு வார்த்தைகள் வேண்டாம், நியாயமான கூலி உயர்வைப் பெற்றுத் தர வேண்டும்" என கோரிக்கை வைத்து, அரை மணி நேரத்திற்கும் மேலாக கடுமையான கேள்விகளை எழுப்பினர்.
இந்த எதிர்பாராத முற்றுகை மற்றும் கேள்விகளால் நயினார் நாகேந்திரன் தர்மசங்கடமான சூழலில் சிக்கினார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் உடன் சென்ற பாஜக நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர். விசைத்தறியாளர்களின் கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு காணப்பட வேண்டும் என்பதை இந்தப் போராட்டம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.