உலகம்

“எனது மரணம் உலகிற்கே கேட்டும்...” -இஸ்ரேல் தாக்குதலில் காசா பெண் பத்திரிகையாளர் உயிரிழப்பு

ஃபாத்திமாவுக்கு இன்னும் சில நாட்களில் திருமணம் நடைபெற இருந்தது.

  “எனது மரணம் உலகிற்கே கேட்டும்...” -இஸ்ரேல் தாக்குதலில் காசா பெண் பத்திரிகையாளர் உயிரிழப்பு
இஸ்ரேல் தாக்குதல் உயிரிழந்த பெண் பத்திரிகையாளர் ஃபாத்திமா ஹசெளனா
பெண் பத்திரிகையாளர்

இஸ்ரேல்- ஹமாஸ் இடையே போர் நடந்து வருகிறது. இந்த போரில் ஏராளமான பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். பலர் வீடுகளை இழந்து சொந்த நாட்டிலேயே அகதிகளாக கூடாரங்களில் வசித்து வருகின்றனர். ஏராளமான குழந்தைகள் போரினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான நடைபெறும் போரினால் ஏற்பட்ட பாதிப்புகளை புகைப்படங்கள் மூலம் உலகிற்கு காட்டியவர் காசாவை சேர்ந்த பெண் பத்திரிகையாளர் ஃபாத்திமா ஹசெளனா (25). இவர் போரினால் ஏற்பட்ட உயிரிழப்புகள், மக்கள் படும் இன்னல்கள், குண்டு வீச்சி தாக்குதலில் ஏற்பட்ட கட்டட சேதங்கள், மக்களின் ஆதங்கம், அவர்களின் கண்ணீர் என அனைத்தையும் தன்னுடைய கேமரா வழியே இந்த உலகிற்கு காட்டி வந்தார்.

எனது மரணம் உலகிற்கே கேட்கும்படி...

இந்த நிலையில், கடந்த புதன்கிழமை வடக்கு காசாவில் நடந்த இஸ்ரேல் தாக்குதலில் ஃபாத்திமா மற்றும் அவரின் குடும்பத்தினர் 10 பேரும் உயிரிழந்துள்ளனர். இதில் கர்ப்பிணியான ஃபாத்திமாவின் சகோதரியும் அடங்குவார். இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழந்த பத்திரிகையாளர் ஃபாத்திமாவிற்கு இன்னும் சில நாட்களில் திருமணம் நடைபெற இருந்ததாக கூறப்படுகிறது.

“நான் ஒரு செய்தியாக இருக்க விரும்பவில்லை. எனது மரணம் உலகிற்கே கேட்கும்படியும், காலத்திற்கும் நிலைத்திருக்கும் படியும் இருக்க விரும்புகிறேன்” என அவர் ஒருமுறை பதிவிட்டதை இணையத்தில் பலர் நினைவுகூர்ந்து வருகின்றனர். ஃபாத்திமாவின் இறப்புக்கு பலரும் இணையத்தில் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். அதேநேரம் இஸ்ரேலின் இந்த தாக்குதலுக்கும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.