தி.மு.க கண்காணித்துக்கொண்டு இருக்கிறது
கோவை, காளப்பட்டி சாலையில் அமைந்து உள்ள தனியார் மண்டபத்தில் பாஜகவின் புதிய மாநில தலைவராக பொறுப்பேற்று கோவைக்கு முதல் முறையாக வருகை தந்த நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏவுக்கு கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு மாவட்டம் சார்ப்பாக சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், “கூட்டணி, எத்தனை சீட் என்பது பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம். அது குறித்து யாரும், பேஸ்புக், எக்ஸ் வலைதளங்களில் பதிவிட வேண்டாம். அது குறித்து நமது தேசிய தலைமை பார்த்துக்கொள்ளும். தி.மு.கவிடம் இருந்து பா.ஜ.க தொண்டர்களை பாதுகாப்பது தான் என்னுடைய வேலை. சீட் எவ்வளவு, தொகுதி எது என்று சொல்வது எல்லாம் சர்தார்வல்லபாய் படேல் (அமித்ஷா) வின் வேலை.அதனால் தயவு செய்து நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். இப்போது அனைவரது போன்களும் டேப் செய்யப்படுகின்றன. எனது போனும் டேப் செய்யப்படுகிறது. யார் ? யார் ? பேசுகிறார்கள், என்னென்ன பேசுகிறார்கள், என்ன செய்யலாம் ? என்கின்ற அளவிற்கு தி.மு.க அரசு கண்காணித்துக்கொண்டு இருக்கிறது.
அமித்ஷா பார்த்துக்கொள்வார்
எனவே அனைவரும் போனில் எச்சரிக்கையாக பேச வேண்டும். இந்த அளவிற்கு நம்மை கண்காணித்து கொண்டு இருக்கிறார். உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னைக்கு வந்து கட்சித் தேர்தலை நடத்தி, கூட்டணியை முடிவு செய்துவிட்டு சென்று உள்ளார். எனக்கு என்ன அறிவுரை கூறுகிறீர்கள் என்று அவரிடம் நான் கேட்டேன்.அதற்கு அவர், நான் அடிக்கடி வந்து செல்வேன், நானே பார்த்துக்கொள்கிறேன் என்று கூறி உள்ளார். அதனால் நமக்கு மற்ற வேலையே இல்லை. நமது ஓட்டுச்சாவடியில் கமிட்டியை சரி செய்தாலே போதும்.
இரட்டை இலையோடு அதிகமான எம்.எல்.ஏக்களுடன் நாம் சட்டசபையில் செல்வோம்.மக்கள் விரோத ஆட்சியை தி.மு.க நடத்தி வருகிறது. மக்களிடம் அதிருப்தி நிலவி வருகிறது. 2026 அவுட் ஆப் கன்ட்ரோல் தி.மு.க ஆகிவிடும். எனக்கு முன்பு அண்ணாமலை உள்ளிட்ட தலைவர்கள் கட்சியை வலுப்படுத்தி உள்ளனர். அ.தி.மு.க தலைவர்கள், தொண்டர்களோடு இணைந்து நாம் பணியாற்ற வேண்டும். திருவண்ணாமலையில் முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, கோவையில் முன்னாள் அமைச்சர் வேலுமணி ஆகியோர் சந்தித்து வாழ்த்துக்களை கூறி உள்ளனர்.
சனாதன தர்மம்
இனியொருமுறை தி.மு.க ஆட்சிக்கு வந்தால் சனாதான தர்மத்தை நாம் காப்பாற்ற முடியாது. நம் பண்பாட்டை காப்பாற்ற முடியாது. எனவே தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிக்கு ஒவ்வொரு தொண்டரும் பாடுபட வேண்டும்” என தெரிவித்தார்.