தமிழ்நாடு

5 நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று மீண்டும் கூடுகிறது சட்டப்பேரவை

அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், கயல்விழி செல்வராஜ் ஆகியோர் பதிலளித்து புதிய அறிவிப்புகளை வெளியிட உள்ளனர்.

5 நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று மீண்டும் கூடுகிறது சட்டப்பேரவை
தமிழக சட்டப்பேரவை

5 நாட்கள் விடுமுறைக்குப் பிறகு தமிழக சட்டப்பேரவை இன்று (ஏப்.15) கூடுகிறது. காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவை கூடியதும் கேள்வி நேரம் நடைபெறும். அதைத்தொடர்ந்து நேரமில்லாத நேரத்தில் முக்கிய பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளன.

சட்டப்பேரவையில் செய்தி மற்றும் விளம்பரம், எழுதுபொருள் மற்றும் அச்சு, தமிழ் வளர்ச்சி, மனிதவள மேலாண்மை ஆகிய துறைகளின் மானியக்கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற உள்ளது. அதற்கு அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், கயல்விழி செல்வராஜ் ஆகியோர் பதிலளித்து புதிய அறிவிப்புகளை வெளியிட உள்ளனர்.

எதிர்க்கட்சிகள் திட்டம்

சட்டப்பேரவை கடந்த வியாழக்கிழமை முதல் திங்கள் வரை (ஏப்.14) வரை விடுமுறை விடப்பட்டிருந்தது. 5 நாட்கள் விடுமுறைக்கு பின் இன்று மீண்டும் கூட உள்ளது. ஆகையால் சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் முக்கிய பிரச்னைகள் குறித்து கேள்வி எழுப்பலாம் என எதிர்பாரக்கப்படுகிறது. ஏற்கனவே பிரதான எதிர்க்கட்சியான அதிமுக சட்டப்பேரவையில் அதிமுக உறுப்பினர்களுக்கு பேச வாய்ப்பு தரப்படுவதில்லை, டாஸ்மாக் விவகாரம் குறித்து சட்டப்பேரவை பேச அனுமதிப்பதில்லை உள்ளிட்ட காரணங்களை கூறி கடந்த வாரம் வெளிநடப்பு செய்தது குறிப்பிடத்தக்கது.