Muthamizh Murugan Maanadu 2024 : சேகர்பாபு கோவிலில் குடியிருக்கிறார்.. முத்தமிழ் முருகன் மாநாட்டை தொடக்கி வைத்து முதல்வர் பெருமிதம்

CM Stalin Launch Muthamizh Murugan Maanadu 2024 in Palani : திமுக ஆட்சியை ஆன்மிக பெரியோர்கள், பக்தர்கள் அனைவரும் பாராட்டி வருகின்றனர் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஆலய வழிபாடுகளில் தமிழ் மொழி முதன்மை பெற வேண்டும். பழனி, திருச்செந்தூர், திருத்தணி உள்ளிட்ட 7 கோயில்களில் பெருந்திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 68 முருகன் கோயில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

Aug 24, 2024 - 11:11
Aug 24, 2024 - 13:58
 0
Muthamizh Murugan Maanadu 2024 : சேகர்பாபு கோவிலில் குடியிருக்கிறார்.. முத்தமிழ் முருகன் மாநாட்டை தொடக்கி வைத்து முதல்வர் பெருமிதம்
CM Stalin Launch Muthamizh Murugan Maanadu 2024 in Palani

CM Stalin Launch Muthamizh Murugan Maanadu 2024 in Palani : பழனியில் நடைபெறும் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை ஆழ்வார்ப்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள தனது முகாம் அலுவலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து மாநாட்டு நிகழ்வுகள் தொடங்கி நடைபெற உள்ளன.’உலக பைந்தமிழர்களை இணைத்து முருகன் மாநாட்டை நடத்துவது மகிழ்ச்சி’ என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே சமூக வலைத்தளத்தில் பதிவு வெளியிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக இந்து சமய அறநிலைத்துறை சார்பில் திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அனைத்து உலக முத்தமிழ் முருகன் மாநாடு இன்றும் நாளையும் என 2 நாட்கள் நடைபெறுகிறது. மாநாடு பழனியில் உள்ள பழனியாண்டவர் கலை பண்பாட்டுக் கல்லூரியில் நடைபெறுகிறது. மாநாட்டில் காணொளி காட்சி மூலம் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். 

அப்போது பேசிய முதல்வர் ஒவ்வொருவருக்கும் ஒரு நம்பிக்கை இருக்கும்; அவற்றுக்கு திராவிட மாடல் அரசு தடையாக இருந்ததில்லை. திமுகவின் தாய்க்கட்சியான நீதிக்கட்சி ஆட்சியில்தான் இந்து கோயில் பாதுகாப்பு சட்டம் இயற்றம். கோயில் வளர்ச்சி, அதில் பணிபுரிவோரின் முன்னேற்றத்திற்கு திராவிட மாடல் துணை நிற்கிறது. திடீரென மாநாடு நடத்தவில்லை; பல திருப்பணிகளை திமுக அரசு செய்து முடித்துள்ளது. 

சேகர்பாபுவை கோவில்களை சீரமைக்க இந்து சமயநலத்துறைக்கு அமைச்சராக்கினோம். அவர் கோவிலிலேயே குடியிருக்கிறார். இதுவரை ஆயிரக்கணக்கான கோவில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது ஆலய வழிபாடுகளில் தமிழ் மொழி முதன்மை பெற வேண்டும். இந்த மாநாட்டில் 300க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள், வெளிநாட்டு அமைச்சர்கள், பிரதிநிதிகள், நீதிபதிகள், ஆதீனங்கள் உள்ளிட்டோரும் பங்கேற்கின்றனர். மேலும் இந்த மாநாட்டில் தமிழ் கடவுள் முருகனின் வழிபாட்டு சிறப்பு, இலக்கிய சிறப்பு குறித்து கருத்துரங்கங்கள் நடைபெருகிறது. 

அத்துடன் முருகனின் புகழ் குறித்த 1,300 ஆய்வு கட்டுரைகள் அழகன் முருகன், பாதயாத்தரையும் முருகனும், நவபாஷாணத்தில் முருகன், அறுபடை வீடுகளில் அவதரித்த முருகன், தமிழும் முருகனும் உட்பட பல்வேறு தலைப்புகளில் வெளியிடப்படுகின்றன். மாநாட்டு மலர் வெளியிடுதல் நிகழ்ச்சியும், முருகனின் புகழ் தொண்டு ஆற்றிய 16 பேருக்கு ஒரு பவுன் தங்கக் காசு மற்றும் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow