பங்குனி உத்திரம் தமிழகத்தில் மட்டுமில்லாது, உலகில் உள்ள அனைத்து முருகன் கோவில்கள் மற்றும் பெருமாள் கோவில்களிலும், சிவன் திருக்கோவில்களிலும் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் நாளாக உள்ளது. இந்த நாள் சைவர்கள் மற்றும் வைணவர்கள் இருவருக்கும் மிகவும் புனிதமான நாளாக கருதப்படுகிறது.
பங்குனி உத்திரத்தின் சிறப்பு:
சமஸ்கிருதத்தில் மீன உத்திர-பால்குனி என்றும் அழைக்கப்படும் பங்குனி உத்திரம் தமிழர்களுக்கு உகந்த நாளாக உள்ளது. சைவமும் வைணவமும் சேரும் புனித நாளாக விளங்கும் பங்குனி உத்திரம், பல்வேறு இறை நிகழ்வுகளுடன் தொடர்புடையதாக உள்ளது. இந்த நாளில்,முருகப்பெருமானுக்கும் வள்ளி அம்மனுக்கும் திருமணம் நடைபெற்ற நாள் என்பதால், முருகன் கோவில்களில் திருக்கல்யாண உற்சவம் விமரிசையாக நடைபெறும். அதேபோல், பரமபத வாசலில் நின்றுகொண்டே, மகா வைஷ்ணவர்களுக்கு பெருமாள் அருள் வழங்கிய நாளாக உள்ளது.
வைணவர்களுக்கு இது ஆண்டாளுக்கும், ரெங்கநாதருக்கும் திருமணம் நடந்த நாளைக் குறிக்கிறது. இது ஸ்ரீரங்கத்தின் ஸ்ரீ ரங்கநாயகி தாயார்-பெரிய பிரத்தியாரின் பிறந்தநாளாகும். பங்குனி உத்திரத்தில், நாராயணன் தனது கல்யாண கோலத்துடன் தனது பக்தர்களுக்கு அருள் வழங்கி வருகிறார்.
ஆன்மீக ரீதியான பயன்கள்:
இந்த நாளில் இறை வழிபாடு செய்தால், குடும்பத்தில் அமைதி நிலவும், வாழ்வில் திருப்பம் ஏற்படும் என்று பக்தர்கள் நம்புகின்றனர். குறிப்பாக, திருக்கல்யாணப் பரிகாரம் வேண்டுவோர், திருமணத்தடை நீங்க வேண்டுவோர், நல்ல வாழ்வை நாடுவோர் இந்த நாளில் வழிபாடு செய்தால் சுபம் ஏற்படும் என்பது ஐதீகம்."
பங்குனி உத்திரத்தன்று திருப்பரங்குன்றம், பழனி, திருச்செந்தூர் போன்ற அறுபடை வீடுகளில் பங்குனி உத்திரம் சிறப்பாகக் கொண்டாடப்படும். திருவண்ணாமலை, சிதம்பரம், காஞ்சிபுரம், மதுரை மீனாட்சியம்மன் கோவில் ஆகிய இடங்களில் இந்த நாளில் பக்தர்கள் கூட்டம் அதிகம் காணப்படும்.
ஆன்மிகம்
பங்குனி உத்திரத்தின் சிறப்புகள்.. இறைவனின் அருள் பொழியும் புனித நாள்!
தமிழ் மாதங்களில் இறுதி மாதமான பங்குனியில் வரும் உத்திரா நட்சத்திரம் மிகுந்த சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. அன்றைய தினமே பங்குனி உத்திர திருவிழாவாக அனைத்து கோவில்களிலும் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.