2 லட்சத்திற்கு குறைவாக இருந்தால்.. தங்க நகைகடன் குறித்து சூப்பர் அறிவிப்பு!
பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துகள் அடிப்படையில், நகைக் கடன்களுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்த கோரி ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது.
பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துகள் அடிப்படையில், நகைக் கடன்களுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்த கோரி ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது.
"பாகிஸ்தான் தாக்குதலால் பாதிக்கப்பட்ட பூஞ்ச், ஜம்மு காஷ்மீருக்கு மறுவாழ்வு தொகுப்பு வழங்க வேண்டும் பிரதமர் மோடிக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார்.
ஐதராபாத்தை தலைமையகமாகக் கொண்ட ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனம், டென்வர் என்ற கோல்டன் ரெட்ரீவரை அதன் தலைமை மகிழ்ச்சி அதிகாரியாக (CHO) நியமித்ததற்காக வைரலாகி வருகிறது.
மத்திய அரசு, 2025-26 சந்தைப் பருவத்திற்கான 14 காரிஃப் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை (MSP) அதிகரித்துள்ளது. முந்தைய ஆண்டு விலைகளுடன் ஒப்பிடும்போது இந்த MSP உயர்வு, விவசாயிகளுக்கு லாபகரமான விலை கிடைப்பதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது என அரசின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மணிப்பூரில் புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு 44 சட்டப்பேரவை உறுப்பினர்கள் தயாராக இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது மணிப்பூர் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
அன்பு எப்போதும் மன்னிப்பு கேட்காது என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில், வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமியை, பக்கத்து வீட்டுக்காரர் ஒருவர் கோயிலுக்குள் அழைத்துச் சென்று பாலியல் வன்புணர்வு செய்துள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
நடுரோட்டில் ஒரு பெண்ணுடன் நபர் ஒருவர் உடலுறவு மேற்கொள்ளும் காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வைரலாகிய நிலையில், தலைமறைவாக இருந்த மனோகர்லால் தாக்கட் போலீசாரால் கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
வருமான வரி தாக்கல் செய்ய வரும் ஜூலை 15 ஆம் தேதி கடைசி நாளாக இருந்த நிலையில், கூடுதலாக 45 நாட்கள் அவகாசம் அளித்து செப்டம்பர் 15 ஆம் தேதி வரை மத்திய நிதியமைச்சகம் நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.
சர்வதேச விண்வெளி நிலையம் செல்லும் முதல் இந்திய வீரர் ஷுபான்ஷு சுக்லா, 14 நாள் தனிமைக்கு அனுப்பப்பட்டுள்ளார். விண்வெளி செல்லும் 3 வீரர்களையும், நாசா குழுவினர் உடல்நிலையை தகுதிப்படுத்தும் குவாரண்டைனுக்கு அனுப்பிவைத்து வாழ்த்து தெரிவித்தனர்.
ஒரு சில வாரங்களுக்கு முன்பு இந்தியா முழுவதும் அதிகம் முணுமுணுக்கப்பட்ட வார்த்தையாக இருந்தது “ஆபரேஷன் சிந்தூர்”. அதன் லோகோ உணர்வுப்பூர்வமாக வடிவமைக்கப்பட்டிருந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர் லோகோவினை வடிவமைத்த வீரர்களின் பெயர்கள் இணையத்தில் தற்போது வெளியாகியுள்ளன.
இந்தியாவின் முன்னணி செய்தி முகமைகளில் ஒன்றான ஏசியன் நியூஸ் இன்டர்நேஷனல் (ANI) மீது பதிப்புரிமை மீறல் மற்றும் முறைகேடான வழியில் பணம் பறிப்பு (extortion) தொடர்பான குற்றச்சாட்டுகளை சுயாதீன யூடியூபர்கள் (Independent creators) எழுப்பியுள்ள சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளன.
நேற்று நடைப்பெற்ற UPSC முதல்நிலை தேர்வில் பெரியார் தொடர்பான கேள்வியொன்று சர்சைக்குள்ளான நிலையில், செஸ் விளையாட்டில் வரலாற்று சாதனை படைத்த டி.குகேஷ் குறித்த கேள்வியும் இடம்பெற்றிருந்தது அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்திய ரயில்வேத் துறையின் கனவுத் திட்டமான மும்பை - அகமதாபாத் இடையேயான அதிவேக புல்லட் ரயில் திட்டப் பணிகள் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எட்டியுள்ளதாக குஜராத் மாநிலத்தை சேர்ந்த அமைச்சர் தெரிவித்துள்ளார். இதுத்தொடர்பாக சில புகைப்படங்களையும் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.
உலக அளவில் பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் ஆப்ரேஷன் சிந்தூர் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
தலைநகர் டெல்லியில் விடிய விடிய கனமழை பெய்ததால், நகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் தலைநகரின் இயல்புநிலை கடும் பாதிப்புக்குள்ளானது.
நடுரோட்டில் ஒரு பெண்ணுடன் நபர் ஒருவர் உடலுறவு மேற்கொள்ளும் காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வைரலாகிய நிலையில், அவர் பாஜகவுடன் தொடர்புடைய நபர் என கண்டறியப்பட்டுள்ளது.அவர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் தேடி வருகின்றனர்.
பிப்ரவரியில் நடைபெற்ற மத்திய அறங்காவலர் குழுவின் கூட்டத்தில், EPFO போன நிதியாண்டில் வழங்கிய 8.25% வட்டி விகிதத்தை, எவ்வித குறைவும் இல்லாமல் இந்த நிதியாண்டும் தொடர முன்மொழிந்தது. தற்போது முன்மொழிவானது நிதி அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் அடுத்த 24 மணி நேரத்திற்குள் தென்மேற்குப் பருவ மழை தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அனைத்து மாநில முதலமைச்சர்கள் பங்கேற்கும் நிதி ஆயோக் நிர்வாகக் குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது. 2047ம் ஆண்டு இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றும் இலக்கில் மாநிலங்களின் பங்களிப்பு குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மைசூர் பாக்கில் உள்ள 'பாக்' என்ற வார்த்தை பாகிஸ்தானை குறிப்பதால், ஆப்ரேஷன் சிந்தூர்-க்கு ஆதரவு அளிக்கும் வகையில் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், இந்தியா - பாகிஸ்தான் பதற்றத்தின் இடையே மைசூர் பாக் இனிப்பின் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
’நான் இந்தி மொழியில் வழிவிடுமாறு கேட்டதற்காக எனக்கு பார்க்கிங் மறுக்கப்பட்டது’, என பெங்களூரிலுள்ள கூகுள் நிறுவனத்தில் பணிபுரியும் அர்பித் பாயா தனது லிங்க்ட் இன் தளத்தில் பதிவிட்டுள்ளார். பெங்களூரில் ஏற்கெனவே இந்தி தொடர்பான பிரச்சினை விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் இவரது பதிவு வைரலாக தொடங்கியுள்ளது.
பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவின் நிலைப்பாடு குறித்து கனிமொழி தலைமையிலான எம்.பி.க்கள் குழு ரஷ்யாவிடம் விளக்க உள்ளது.
நடுவானில் விமானம் குலுங்கிய போது, பயணிகள் அலறிய வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது
டெல்லி, உத்தரப்பிரதேசம் உள்பட வடமாநிலங்களில் கொட்டித் தீர்த்த கனமழையால் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.