பீகார் மாநிலம் பாபாசாகேப் பீம்ராவ் அம்பேத்கர் பல்கலைக்கழகத்தில் முதுகலைத் தேர்வு முடிவுகளில் பெரும் குளறுபடி ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் இந்த பல்கலைக்கழகத்தில் நடைப்பெற்று முடிந்த முதுகலை மூன்றாம் செமஸ்டர் தேர்வுகளின் முடிவுகள் வெளியிடப்பட்டது.
ரிசல்ட் முடிவானது, கணிதவியல் துறை மேதாவிகளை கூட திக்குமுக்காடச் செய்யும் வகையில் வந்துள்ளது. உதாரணத்திற்கு ஒரு மாணவரின் ரிசல்டை மட்டும் எடுத்துக்கொண்டால், 100 மதிப்பெண் கொண்ட பேப்பரில் 257 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். 30 மதிப்பெண் கொண்ட செய்முறை தேர்வில் 225 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
இதில் கொடூரமான விஷயம் என்னவென்றால், இவ்வளவு மதிப்பெண்கள் எடுத்தும் அந்த மாணவன் தேர்ச்சி பெறவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. 100-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இன்னும் கல்லூரியின் சார்பில் வழங்கப்பட்டும் இண்டர்நெல் மார்க் வழங்கவில்லை என்பதால், அவர்களின் தேர்வு முடிவானது கேள்விக்குறியாகியுள்ளது.
ஏறத்தாழ 9,000 மாணக்கர்கள் தேர்வெழுதியுள்ள நிலையில், 8,000 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பல்கலைக்கழகத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டாளர் பேராசிரியர் ராம் குமார் கூறுகையில், ”இந்த தேர்வு முடிவுகளின் முரண்பாடுகளுக்கு, மதிப்பெண்களை எக்செல் தாள்களில் உள்ளீடு செய்யும் போது செய்த மனித தவறுகளே காரணம்” என்று தெரிவித்துள்ளார். மேலும், இந்தத் தவறுகள் தற்போது சரிசெய்யப்பட்டு விட்டதாகவும், எதிர்காலத்தில் கடுமையான சரிபார்ப்பு நடைமுறைகள் பின்பற்றப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
இதுப்போல விசித்திரமான ரிசல்ட் வெளியிடப்பட்டிருப்பது முதல் முறையல்ல. இந்த பல்கலைக்கழகத்தின் தேர்வு முடிவுகளில் தொடர்ச்சியாகவே குளறுபடி நடந்தேறி தான் வருகிறது என மாணவர்கள் சார்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. இந்த ரிசல்ட் குளறுபடி சம்பவம் கல்வித்துறை வட்டாரங்களிலும், பொதுமக்கள் மத்தியிலும் பல்கலைக்கழகத்தின் செயல்பாடுகள் குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.