தமிழ்நாடு

ப்ரஷர் குக்கரில் சமைக்கிறீங்களா.. மருத்துவர்கள் தெரிவித்த அதிர்ச்சி தகவல்!

பிரபல மருத்துவர் ஒருவர் சமீபத்தில் சமூக ஊடகத்தில் பகிர்ந்த பதிவில், ஒரு நபருக்கு ப்ரஷர் குக்கரில் சமைத்து சாப்பிட்டதால், உடலில் கடுமையான ஈயம் (lead) விஷம் கலந்த உண்மை சம்பவத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

ப்ரஷர் குக்கரில் சமைக்கிறீங்களா..  மருத்துவர்கள் தெரிவித்த அதிர்ச்சி தகவல்!
ப்ரஷர் குக்கரில் சமைக்கிறீங்களா.. மருத்துவர்கள் தெரிவித்த அதிர்ச்சி தகவல்!
மும்பையில் 50 வயதுடைய நபர் ஒருவருக்கு பழைய அழுகிய பிரஷர் குக்கரை பயன்படுத்தி சமைத்த உணவை தொடர்ந்து உண்டதால் தீவிரமான ஈயம் (lead poisoning) விஷமாக மாறி உடலில் கலந்தது தெரியவந்துள்ளது. இந்த தகவலை மருத்துவர் ஒருவர் சமூக வலைதளத்தில் தெரிவித்து, அனைவரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து மருத்துவர் கூறியதாவது, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நபருக்கு பல மாதங்களாக பல்வேறு உடல் பிரச்சனைகள் இருந்தன. உடல் பலவீனம், மூளை மந்தம், சிறுநீரில் கோளாறு, ஆண்மை குறைபாடு மற்றும் இரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைவு, நினைவிழப்பு, சோர்வு, கால்களில் கடும் வலி மற்றும் உணர்வு குறைவு போன்ற அறிகுறிகள் இருந்ததாக தெரிவித்துள்ளார். ஆரம்பத்தில், மருத்துவ பரிசோதனைகளில் எதுவும் தெரியவில்லை என்றும், பின்னர், ஹெவி மெட்டல் ஸ்கிரீனிங் மூலம் ஆய்வு செய்ததில், அவரது ரத்தத்தில் ஈயத்தின் அளவு 22 மைக்ரோகிராம்/டெசிலிட்டர் எனக் கண்டறியப்பட்டுள்ளது. இது நீடித்த ஈயம் விஷம் என்று ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்தது விசாரணையில், அவர் பயன்படுத்திய ப்ரெஷர் குக்கர் தட்டில் சீசம் (lead) கலந்திருந்தது என்பதும், அதில் தினமும் உணவு சமைத்ததால் தொடர்ச்சியாக அந்த விஷம் உடலில் சென்றது என்பதும் தெரியவந்தது.அவரது மனைவி கடந்த 20 ஆண்டுகளாக ஒரே பிரஷர் குக்கரை பயன்படுத்தி சமைத்து வந்ததாக தெரிய வந்தது. பழைய மற்றும் சேதமடைந்த அலுமினியம் குக்கர் புளிப்பான உணவுகளுடன் தொடர்பு கொண்டால், அதிலுள்ள ஈயமும், அலுமினியமும் உணவில் கரைந்து விடும். அதிக அளவு ஈயம் உடலில் சேரும் போது, இது நரம்பு செல்களில் கால்சியம் சானல்கள் தடைபட்டு, மூளையின் சிக்னல்கள் மந்தமாகும் என்றும் மருத்துவர் விளக்கினார்

“சாதாரணமாக நாம் நினைக்கும் மருந்துகள், உடல்நலம் மற்றும் ஹார்மோன் பிரச்சனைகள் அல்ல, உணவுப் பாத்திரங்களின் தரமற்ற தன்மை காரணமாக இந்த வகை விஷவாதம் ஏற்படுவதாகவும், பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும் மருத்துவர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய அவசர உலகில், நேரமின்மை காரணமாக ப்ரஷர் குக்கரில் உணவு சமைக்கும் சூழலில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல், உணவு தயாரிக்கும் பாத்திரங்களின் தரத்தையும், அவற்றின் பாதுகாப்பு சான்றிதழ்கள் உள்ளதா என சரிபார்ப்பது முக்கியம் என்பதை வலியுறுத்துகிறது.