மத்தியப் பிரதேசத்தின் சகண்டி கிராமத்தில் உள்ள ஒரு அரசுப் பள்ளி சுவரில் வெறும் 4 லிட்டர் பெயிண்ட் அடிப்பதற்காக 168 தொழிலாளர்கள் மற்றும் 65 கொத்தனார்கள் பயன்படுத்தப்பட்டுள்ளனர். இதுதொடர்பான ரசீது ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சகண்டி அரசு பள்ளியில் நான்கு லிட்டர் ஆயில் பெயிண்ட்டுக்கு ரூ. 1.07 லட்சம் செலவு செய்யப்பட்டதாகவும், நிபானியா கிராமத்தில் உள்ள மற்றொரு பள்ளியில் 20 லிட்டர் பெயிண்ட்டுக்கு ரூ. 2.3 லட்சம் செலவு செய்யப்பட்டதாகவும் அந்தப் பட்டியல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சகண்டி பள்ளியின் சுவற்றில் பெயிண்ட் அடிக்க 168 தொழிலாளர்கள் மற்றும் 65 கொத்தனார்கள் பயன்படுத்தப்பட்டதாகவும், நிபானியா பள்ளியில் 10 ஜன்னல்கள் மற்றும் 4 கதவுகளுக்கு பெயிண்ட் அடிக்க 275 தொழிலாளர்கள் மற்றும் 150 கொத்தனார்கள் பணியில் ஈடுபட்டதாகவும் அந்த ரசீதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வேலையை மேற்கொண்ட சுதாகர் கன்ஸ்ட்ரக்ஷன் என்ற கட்டுமான நிறுவனம், மே 5, 2025 அன்று ஒரு ரசீதை உருவாக்கியது. ஆனால் அந்த ரசீது ஒரு மாதத்திற்கு முன்பே - ஏப்ரல் 4 அன்று - நிபானியா பள்ளியின் தலைமை ஆசிரியரால் சரிபார்க்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக மாவட்டக் கல்வி அதிகாரி பூல் சிங் மர்பாச்சி கூறுகையில், "இந்த இரண்டு பள்ளிகளின் ரசீதுகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. இது தொடர்பாக விசாரிக்கப்பட்டு வருகின்றன. தவறு செய்தவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அவர் தெரிவித்தார்.