நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் ஜூலை 21 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 21 ஆம் தேதி வரை ஒரு மாதம் நடைபெறுகிறது. ஆகஸ்ட் 15 சுதந்திர தினம் என்பதால் அதற்கு முந்தைய 2 நாட்கள் நாடாளுமன்றம் செயல்படாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி மாதம் 31ஆம் தேதி தொடங்கியது. இந்த கூட்டத் தொடரில் பல்வேறு முக்கியமான மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டன. பல மசோதாக்கள் போதிய விவாதமின்றி நிறைவேற்றப்பட்டதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இதன் பின்னர் ஏப்ரல் 4 ஆம் தேதி நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.
தற்போது, நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் வருகிற 21 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 21 ஆம் தேதி வரை நடைபெறும் என நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
ஆகஸ்ட் 15 சுதந்திர தினம் என்பதால் அதற்கு முந்தைய 2 நாட்கள் நாடாளுமன்றம் செயல்படாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மூன்று மாதங்களுக்கும் மேலான இடைவெளிக்கு பிறகு நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஜூலை 21 ஆம் தேதி காலை 11 மணிக்குக் கூட உள்ளது. நாடாளுமன்ற மரபின்படி, கூட்டத்தொடரின் தொடக்க நாளான ஜூலை 21 ஆம் தேதி, பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்ற வளாகத்திலிருந்து ஊடகங்களுக்கு உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் கூட்டத்தொடரில் காப்பீடு தொடர்பான மசோதா உட்பட பல மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கூட்டத்தொடர் கடந்த கூட்டத்தொடரை விட மத்திய பாஜக அரசுக்கு சவால் நிறைந்ததாக இருக்கும் என கருதப்பட்டுகிறது. குறிப்பாக பஹல்காம் தாக்குல், இந்தியா பாகிஸ்தான் விவகாரத்தில் அமெரிக்கா தலையீடு தொடர்பாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பல்வேறு கேள்விகளை முன்வைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், மழைக்கால கூட்டத்தொடருக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.